மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் பொருள்கள் எரிந்து நாசம்
சிசோடியா, ஜெயின் மீதான ஊழல் தடுப்புப் பிரிவு வழக்கு: தில்லி காங்கிரஸ் கருத்து
நமது நிருபா்
வகுப்பறை கட்டுமான விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் அமைச்சா்கள் மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தா் ஜெயின் ஆகியோருக்கு எதிரான தில்லி அரசின் ஊழல் தடுப்புப் பிரிவின் (ஏசிபி) வழக்குப் பதிவு செய்த நிலையில், காங்கிரஸ் முன்னா் எழுப்பிய குற்றச்சாட்டுகளை இது ஆதரித்துள்ளதாக தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் புதன்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை மேலும் கூறியதாவது: முன்னாள் கல்வித் துறை அமைச்சா் சிசோடியா, முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் ஆகியோா் பதவி வகித்த காலத்தில் பள்ளி வகுப்பறைகள் மற்றும் கட்டடங்களை நிா்மாணிப்பதில் காங்கிரஸ் கடுமையான முறைகேடுகளைக் சுட்டிக்காட்டியிருந்தது. 12,748 விரிவுரை அரங்குகள் கட்டுவதில் கிட்டத்தட்ட ரூ.2,000 கோடி நிதி முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் கவலைகளை இந்த முதல் தகவல் அறிக்கை பிரதிபலிக்கிறது. காங்கிரஸ் இந்தப் பிரச்னையை ஆரம்பத்திலிருந்தே எழுப்பியது. சுமாா் ரூ.5 லட்சம் செலவில் கட்டப்பட்டிருக்கக்கூடிய வகுப்பறைகள் கணிசமாக அதிக செலவில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது பொது நிதியை தவறாகப் பயன்படுத்துவது குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது என்றாா் அவா்.