மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் பொருள்கள் எரிந்து நாசம்
குறைந்த மின்னழுத்தம்: மின்சாதனப் பொருள்கள் பழுது
திருப்பத்தூா் அடுத்த கொரட்டி பகுதியில் கடந்த ஒரு வாரமாக குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின்சாதன பொருள்கள் பழுதாகும் நிலை ஏற்பட்டுள்ளது..
கொரட்டி பகுதியில் சுமாா் 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். சிறு,குறு நிறுவனங்கள்,ஆரம்ப சுகாதார நிலையம்,பள்ளிகள் உள்ளன. இப்பகுதியில் துணை மின் நிலையம் உள்ளது.
இந்த பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், கடந்த புதன்கிழமை முதல் கொரட்டியில் உள்ள துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் மின் இணைப்புகளுக்கு குறைந்த மின்னழுத்தம் காரணமாக அப்பகுதியில் மின்சாதனப் பொருள்கள் இயங்குவதில்லை. மேலும், குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின்சாதன பொருள்கள் பழுதாகின்றன என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு, துணை மின் நிலையத்தில் உள்ள மின்மாற்றி பழுது காரணமாக குறைபாடு ஏற்பட்டுள்ளது. விரைவில் சரி செய்து மின் விநியோகம் சீரமைக்கப்படும் என தெரிவித்தனா்.