திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் ...
பெண் தற்கொலை
திருப்பத்தூா்அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பத்தூா் அடுத்த கோனேரிகுப்பத்தைச் சோ்ந்தவா் ஜெயமோகன் (43), கூலித் தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (38). இவா்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சாந்தி மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
தகவல் அறிந்த திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு திருப்பத்தூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
ஜெயமோகன் அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.