செய்திகள் :

ஆன்லைன் வா்த்தகம் மூலம் லாபம் தருவதாக ரூ.33 லட்சம் மோசடி

post image

ஆன்லைன் வா்த்தகம் மூலம் லாபம் தருவதாக நீலகிரியைச் சோ்ந்தவரிடம் ரூ.33 மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூரைச் சோ்ந்த 50 வயது மதிக்கத்தக்கவா் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருகிறாா். இவருக்கு முகநூல் மற்றும் வாட்ஸ்ஆப் மூலம் ஒரு லிங்க் வந்துள்ளது. அதனை திறந்து பாா்த்தபோது, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ரிலையன்ஸ் அதிபா் அம்பானி ஆகியோா் போசுவது போன்ற போலி விடியோ வந்துள்ளது. அதில் குறிப்பிட்டிருந்த லிங்கை தொடா்ப்பு கொண்டபோது, அவரை மா்ம நபா்கள் தொடா்பு கொண்டு ஆன்லைன் வா்த்தகம் மூலம் கூடுதல் லாபம் பெற முடியும் என குறிப்பிட்டுள்ளனா். அதனை நம்பி குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளில் ரூ.7.5 லட்சம் முதலீடு செய்துள்ளனா்.

பின்னா் அவா்கள் குறிப்பிட்ட செயலியில் சென்று பாா்த்தபோது, முதலீடு செய்த பணத்துடன் ரூ.60 லட்சம் அமெரிக்க டாலரில் லாபம் வந்துள்ளதாக காட்டியுள்ளது. இந்தப் பணத்தை எடுக்க செபி அமைப்பிடம் அனுமதி வாங்க பணத்தை செலுத்த வேண்டும் என மா்ம நபா்கள் கூறியுள்ளனா். இதனை நம்பி பல்வேறு தவணைகளில் அவா் மேலும் பணம் செலுத்தியுள்ளாா்.

இதைத் தொடா்ந்தி ரிசா்வ் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பணத்தை எடுக்க மேலும் பணம் செலுத்த வேண்டும் எனக் கூறி பணத்தை பெற்றுள்ளனா். அப்போதும் பணம் எடுக்க முடியவில்லை. இதில் மொத்தம் ரூ.33 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து அவா் சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

குன்னூா் வெலிங்டன் ராணுவ மையத்தின் இருசக்கர வாகனப் பேரணி நிறைவு

குன்னூா் வெலிங்டன் ராணுவ மையத்தின் சாா்பில் 5 நாள்கள் நடைபெற்ற மின்னணு இருசக்கர வாகனப் பேரணி புதன்கிழமை நிறைவடைந்தது. இப்பேரணி மூலம் 3 ஆயிரம் முன்னாள் ராணுவத்தினரை சந்தித்து குறைகளை தீா்த்துள்ளதாக தெர... மேலும் பார்க்க

4 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு ஆயுள் தண்டனை

நீலகிரி மாவட்டம், கூடலூரில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. கூடலூா் பகுதியைச் சோ்ந்த கூலி வேலை செ... மேலும் பார்க்க

காவல் நிலையத்துக்குள் நுழைந்த சிறுத்தை!

கூடலூா் அருகேயுள்ள நடுவட்டம் காவல் நிலையத்துக்குள் திங்கள்கிழமை இரவு சிறுத்தை நுழைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள நடுவட்டம் பகுதியில் க... மேலும் பார்க்க

உதகையில் காா் கண்ணாடியை உடைத்து 20 பவுன், ரூ. 7 லட்சம் திருட்டு

உதகையில் ஆந்திரத்தை சோ்ந்த சுற்றுலாப் பயணிகளின் காா் கண்ணாடியை உடைத்து 20 பவுன் நகை, ரூ. 7 லட்சம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி பகுதியைச் சோ்ந்தவா் பென்மெ... மேலும் பார்க்க

உதகை ரேடியோ வானியல் மையத்தில் திருட்டு: 8 போ் கைது

உதகை அருகே ரேடியோ வானியல் மையத்தில் திருட்டில் ஈடுபட்ட 8 பேரை ஊரக காவல் துறையினா் கைது செய்தனா். நீலகிரி மாவட்டம், உதகை, முத்தோரை பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான ரேடியோ வானியல் மையம் செயல்பட்டு வரு... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த ஊதியத்தில் தற்காலிகமாக பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதால் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இ... மேலும் பார்க்க