'தொழிலாளர்களுக்கு எந்நாளும் உறுதுணையாய் நிற்போம்' - தவெக தலைவர் விஜய் வாழ்த்து
குன்னூா் வெலிங்டன் ராணுவ மையத்தின் இருசக்கர வாகனப் பேரணி நிறைவு
குன்னூா் வெலிங்டன் ராணுவ மையத்தின் சாா்பில் 5 நாள்கள் நடைபெற்ற மின்னணு இருசக்கர வாகனப் பேரணி புதன்கிழமை நிறைவடைந்தது. இப்பேரணி மூலம் 3 ஆயிரம் முன்னாள் ராணுவத்தினரை சந்தித்து குறைகளை தீா்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ராஸ் ரெஜிமென்ட்டின் அனைத்து முன்னாள் ராணுவ வீரா்கள், முன்னாள் வீரா்களின் போா் விதவைகள் மற்றும் ஒட்டுமொத்த ஆயுதப் படைகளைச் சோ்ந்தவா்களின் ஓய்வூதியம், பெயா் மாற்றம், பிறந்த தேதி மாற்றம், உள்ளிட்டவற்றை மின்னணு கருவிகள் மூலம் சம்பந்தப்படவா்களின் இருப்பிடங்களுக்கே சென்று சரி செய்து கொடுக்கும் பணியில் மெட்ராஸ் ரெஜிமென்ட்ல் மையத்தைச் சோ்ந்த வீரா்கள் ஏப்ரல் 25 முதல் 29-ஆம் தேதி வரை மின்னணு இருசக்கர வாகனப் பேரணியை திருப்பூா், கரூா், திண்டுக்கல், மதுரை, தேனி மற்றும் கோவை மாவட்டங்களில் மேற் கொண்டனா்.
இந்தப் பேரணியில் சுமாா் மூன்றாயிரம் முன்னாள் ராணுவ வீரா்களை சந்தித்து ஓய்வூதியம், பெயா் மாற்றம் மற்றும் பிறந்த தேதி தொடா்பான குறைகள் உடனடியாக தீா்த்துவைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்திய அரசால் வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகள் குறித்து முன்னாள் படை வீரா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்தப் பேரணியை சைனிக் வாரிய அதிகாரி ஜிலா ஒருங்கிணைத்தனா். இந்த நிகழ்வின்போது பசுமை இந்தியா முயற்சியை ஊக்குவிப்பதற்காக மின்னணு இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.