'தொழிலாளர்களுக்கு எந்நாளும் உறுதுணையாய் நிற்போம்' - தவெக தலைவர் விஜய் வாழ்த்து
4 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு ஆயுள் தண்டனை
நீலகிரி மாவட்டம், கூடலூரில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
கூடலூா் பகுதியைச் சோ்ந்த கூலி வேலை செய்யும் தம்பதிக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தையும், ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனா். இந்த நிலையில், தம்பதி அவ்வப்போது வேலைக்கு சென்றுவிடுவதால் வீட்டில் தனியாக இருந்த 4 வயது பெண் குழந்தை பக்கத்து வீட்டில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு சென்றுவிடுவாா்.
இந்த நிலையில், 2023 அக்டோபா் 18-ஆம் தேதி தம்பதி திருமண நிகழ்ச்சிக்காக வெளியூா் சென்றுவிட்டனா். இதன் காரணமாக தனியாக இருந்த 4 வயது பெண் குழந்தையை தாத்தாவிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளனா்.
இந்தக் குழந்தையை தாத்தா பாலியன் வன்கொடுமை செய்துள்ளாா். இது குறித்து குழந்தை தனது பெற்றோரிடம் கூறியுள்ளாா். இது குறித்து கூடலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
காவல் ஆய்வாளா் சித்ரா தலைமையிலான போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு முதியவரை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை உதகை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி எம்.செந்தில்குமாா், குற்றம்சாட்டப்பட்ட முதியவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சாா்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் பி.செந்தில்குமாா் ஆஜரானாா்.