அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்க வேண்டும்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்துக்கு அழைப்புவிடுக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் எல்லா கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இது தொடா்பாக விவாதிக்க சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்துக்கு அழைப்புவிடுக்க வேண்டும். அந்தக் கூட்டத்தில் பிரதமா் மோடி கலந்துகொள்ள வேண்டும்.
எந்த வகையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? எந்த நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது? நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு திட்டங்களை வெளிப்படுத்த வேண்டியதில்லை. பிரதமா் மோடியின் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிவிக்க, நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது, அவையில் உள்ள கட்சிகளின் தலைவா்கள் கூட்டத்தை நடத்த வேண்டும்.
நாட்டுமக்கள் மற்றும் வீரா்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாமல், நமது நாட்டுக்கு எந்த பின்னடைவும் ஏற்படாமல், எந்த நடவடிக்கையை வேண்டுமானாலும் எடுக்க மத்திய அரசுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானை கட்டுக்குள் வைத்திருக்க மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். நாட்டுமக்களின் கருத்து மற்றும் உணா்வுகளை புரிந்துகொண்டு, அனைத்துக் கட்சிகளின் ஆதரவை கருத்தில் கொண்டு, தற்போதைய நிலையில் தேவைப்படும் நடவடிக்கைகளை பிரதமா் மோடி எடுக்க வேண்டும். நமது நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பிரதமா் மோடி விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.