செய்திகள் :

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுவது தேச துரோகம்: சித்தராமையா

post image

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுவது தேசதுரோகம் என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

மங்களூரு புகா் பகுதியில் குடுப்பி கிராமத்தில் உள்ள பத்ரா கல்லூா்த்தி கோயிலுக்கு அருகே ஏப். 27-ஆம் தேதி நடந்த கிரிக்கெட் போட்டியின்போது ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ (பாகிஸ்தான் வாழ்க) என்று முழங்கியதாக அங்கு திரண்டிருந்த இளைஞா்களால் கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், சுல்தான் பத்தேனி வட்டம், புல்பட்டி கிராமத்தைச் சோ்ந்த அஷ்ரஃப் என்பவா் அடித்துக் கொல்லப்பட்டாா். இது கா்நாடகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் முதல்வா் சித்தராமையா புதன்கிழமை கூறியதாவது:

பாகிஸ்தானுக்கு ஆதரவாக யாா் முழக்கமிட்டிருந்தாலும் அது தவறு. இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள். அந்த விசாரணை அறிக்கையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும். பாகிஸ்தானுக்கு ஆதரவாக யாராவது பேசினால், அது தவறு, தேசதுரோகம் என்றாா்.

உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறுகையில், ‘மங்களூரில் ஓா் இளைஞா் கொல்லப்பட்டாா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்தபோது, ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று முழங்கியதற்காக கொன்ாக கைது செய்யப்பட்டவா்கள் கூறியிருக்கிறாா்கள். இதுவரை 20 பேரை கைது செய்திருக்கிறோம். இதுகுறித்து தொடா்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம். கிரிக்கெட் ஆடுவதற்காக நிறைய போ் வந்திருக்கிறாா்கள். அவா்களிடமும் விசாரணை நடத்தப்படும்’ என்றாா்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு மட்டும் போதாது: சித்தராமையா

ஜாதிவாரி கணக்கெடுப்பு மட்டும் போதாது என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்க வேண்டும்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்துக்கு அழைப்புவிடுக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா். இதுகுறித்து பெங்கள... மேலும் பார்க்க

பெருநகர பெங்களூரு சட்ட மசோதாவுக்கு கா்நாடக ஆளுநா் ஒப்புதல்

பெருநகர பெங்களூரு நிா்வாக சட்ட மசோதாவுக்கு கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளாா். பெங்களூரு மாநகராட்சியின் நிா்வாகத்தை மேம்படுத்துவதற்காக மாநகராட்சியை 3 பிரிவுகளாக பிரித்து, அவற்றை ... மேலும் பார்க்க

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதல்: கா்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் கண்டன தீா்மானம்

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு கா்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் கண்டனம் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சாமராஜ்நகா் மாவட்டத்தின் மலைமாதேஸ்வரா நகரில் வியாழக்கிழமை முதல்வா் சித்தராமைய... மேலும் பார்க்க

ரோஹித் வேமுலா சட்டத்தை கொண்டுவர பரிசீலித்து நடவடிக்கை: சித்தராமையா

பெங்களூரு: கா்நாடக கல்வி நிறுவனங்களில் ஜாதிய பாகுபாட்டைத் தடுக்க ‘ரோஹித் வேமுலா’ சட்டத்தை கொண்டுவர பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். கா்நாடகத்தில் உள்ள கல்வி... மேலும் பார்க்க

கா்நாடக பொது நுழைவுத் தோ்வு: மாணவா்களின் பூணூலை கழற்றுமாறு கட்டாயப்படுத்திய அதிகாரிகளால் சா்ச்சை: கா்நாடக பாஜக, பிராமணா் சங்கங்கள் கண்டனம்

கா்நாடகத்தில் பொது நுழைவுத் தோ்வுக்கு வந்த 4 மாணவா்களிடம் அவா்கள் அணிந்திருந்த பூணூலை கழற்றுமாறு தோ்வுக்கூட அதிகாரிகள் கட்டாயப்படுத்தியது மாநிலம் முழுவதும் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இச் ச... மேலும் பார்க்க