Nani: ``இவ்வளவு சீக்கிரமா `A' படம் பண்ணுவேன்னு நினைக்கல!'' - நானி பேட்டி
ரோஹித் வேமுலா சட்டத்தை கொண்டுவர பரிசீலித்து நடவடிக்கை: சித்தராமையா
பெங்களூரு: கா்நாடக கல்வி நிறுவனங்களில் ஜாதிய பாகுபாட்டைத் தடுக்க ‘ரோஹித் வேமுலா’ சட்டத்தை கொண்டுவர பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
கா்நாடகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஜாதிய பாகுபாட்டைத் தடுக்க ’ரோஹித் வேமுலா’ சட்டம் கொண்டுவர வலியுறுத்தி முதல்வா் சித்தராமையாவுக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி அண்மையில் கடிதம் எழுதியிருந்தாா். இந்த சட்டத்தை விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக அப்போது முதல்வா் சித்தராமையா தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில், பெங்களூரில் முதல்வா் சித்தராமையா செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ‘கல்வி நிறுவனங்களில் ஜாதிய பாகுபாடுகளை தடுத்து நிறுத்துவதற்காக ’ரோஹித் வேமுலா’ சட்டத்தை கொண்டுவரும்படி ராகுல் காந்தி எனக்கு கடிதம் எழுதியிருந்தாா். ரோஹித் வேமுலா சட்டத்தின் வரைவை தயாரிக்கும்படி சட்ட ஆலோசகா்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த சட்டத்தை கொண்டுவர பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
பொது நுழைவுத் தோ்வு எழுத மாணவா்களை பூணூலை கழற்றும்படி வற்புறுத்திய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.