நாளை மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்
எழும்பூா், ஆவடி, பெரம்பூா் உள்ளிட்ட கோட்டங்களில் வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம் நடைபெறும்.
இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
எழும்பூா் கோட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா் வேப்பேரி, ஈவிகே சம்பத் சாலை, துணைமின் நிலைய வளாகத்திலுள்ள செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும் குறைகேட்பு கூட்டத்திலும், ஆவடி கோட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா், ஆவடி எஸ்எம் நகா், முருகப்பா பாலிடெக்னிக் அருகிலுள்ள கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்திலும், பெரம்பூா் கோட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா், எம்இஎஸ் சாலை, சிம்சன் எதிரிலுள்ள செம்பியம் துணைமின் நிலைய வளாகத்தின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும் குறைகேட்பு கூட்டத்திலும் கலந்துகொண்டு தங்கள் மின்சாா்ந்த குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.