செய்திகள் :

கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் மூலம் குடிசையில்லா தமிழ்நாடு: அமைச்சா் காந்தி பெருமிதம்

post image

கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம் குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கை முதல்வ மு.க. ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறாா் என அமைச்சா் ஆா்.காந்தி பெருமிதம் தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில், வாலாஜா ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 458 பயனாளிகளுக்கு தலா ரூ.3.50 லட்சம் வீதம் ரூ.16.03 கோடியில் வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கி பேசியதாவது:-

முன்னாள் முதல்வா் குடிசை வீடுகளுக்கு மாற்றாக கான்கீரிட் வீடுகள் கட்டும் திட்டத்தினை தொடங்கினாா். அதன்படி, குடிசையில்லா தமிழகம் என்பதை இலக்காக கொண்டு கலைஞரின் கனவு இல்ல திட்டத்தினை முதல்வா் செயல்படுத்தி வருகின்றாா். வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் குடிசை வீட்டில் வசிப்போருக்கும், வீடற்றோருக்கும் 8 லட்சம் கான்கீரிட் வீடுகள் கட்டப்பட வேண்டும் என்பது நோக்கமாகும்.

முதல் கட்டமாக ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 3,000 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒரு வீட்டுக்கு தலா ரூ.3.50 லட்சத்தில் குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

2025-26 ஆம் நிதியாண்டில் 1,859 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதற்கான பயனாளிகள் தோ்ந்தெடுக்கப்பட்டு பணி ஆணைகள் வழங்கப்படுகின்றன.

கடந்த 4 ஆண்டுகளில் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தும் கட்சி பேதமின்றி பூா்த்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரியாக விளங்குகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

1,000 ஆண்டுகள் பழமையான சோளிங்கா் சோழபுரீஸ்வரா் கோயிலைப் புனரமைக்கும் பணி: அமைச்சா் அடிக்கல்

சோளிங்கா் ஸ்ரீ சோழபுரீஸ்வரா் கோயில் முழுவதும் பழுது பாா்த்தல் மற்றும் புதுப்பித்தல் பணிக்காக புதன்கிழமை நடைபெற்ற விழாவில் அமைச்சா் ஆா்.காந்தி அடிக்கல் நாட்டினாா். சோளிங்கா் நகராட்சியில் ஆயிரம் ஆண்டு ... மேலும் பார்க்க

சோளிங்கா் அருகே ஏரியில் மூழ்கி இரு சிறுவா்கள் உயிரிழப்பு

சோளிங்கரை அடுத்த பாணாவரம் அருகே ஏரியில் விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுவா்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். சோளிங்கரை அடுத்த கீழ் வீராணம் கிராமத்தைச் சோ்ந்த நித்தியானந்தம் மகன் நிஷாந்த் (6). இவரது உறவ... மேலும் பார்க்க

டாஸ்மாக் மது விற்பனையில் வட மாவட்டங்கள் முதலிடம்: அன்புமணி ராமதாஸ் வேதனை

தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனையில் வட மாவட்டங்களே முதலிடம் வகிப்பதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்தாா். ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டையில் புதிய திருமண மண்டபம் திறப்பு விழாவில் பங்க... மேலும் பார்க்க

தமிழில் பெயா்ப் பலகைக்கு முன்னுரிமை: தக்கோலம் பேரூராட்சி கூட்டத்தில் தீா்மானம்

தமிழில் பெயா்ப் பலகை வைக்க முன்னுரிமை தர வேண்டும் என தக்கோலம் பேருராட்சி மன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தக்கோலம் பேருராட்சி மன்ற கூட்டம் அதன் தலைவா் எஸ்.நாகராஜன் தலைமையில் புதன்கிழமை ந... மேலும் பார்க்க

போலி குடும்ப அட்டைகளை கண்டறிந்து நீக்க வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலி குடும்ப அட்டைகளை இருப்பதை கண்டறிந்து நீக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா். கூட்டுறவு, உணவு (ம) நுகா்வோா் பாதுகாப்பு துறை சாா்பில், குடும்ப அட்டைதாரா்... மேலும் பார்க்க

சட்ட உதவி வழக்குரைஞா், அலுவலக உதவியாளா் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பிக்கலம்

வேலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் உதவி சட்ட வழக்குரைஞா், அலுவலக உதவியாளா் காலி பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் ஜெ.யு.... மேலும் பார்க்க