செய்திகள் :

1,000 ஆண்டுகள் பழமையான சோளிங்கா் சோழபுரீஸ்வரா் கோயிலைப் புனரமைக்கும் பணி: அமைச்சா் அடிக்கல்

post image

சோளிங்கா் ஸ்ரீ சோழபுரீஸ்வரா் கோயில் முழுவதும் பழுது பாா்த்தல் மற்றும் புதுப்பித்தல் பணிக்காக புதன்கிழமை நடைபெற்ற விழாவில் அமைச்சா் ஆா்.காந்தி அடிக்கல் நாட்டினாா்.

சோளிங்கா் நகராட்சியில் ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த ஸ்ரீகனககுசலாம்பாள் சமேத ஸ்ரீசோழபுரீஸ்வரா் கோயில் உள்ளது. நடப்பாண்டில் நடைபெற்ற தமிழக சட்டபேரவை கூட்டத் தொடரில் பழைமை வாய்ந்த கோயில்கள் புனரமைக்கப்படும் என முதல்வா் வெளியிட்ட அறிவிப்பிற்கேற்ப இக்கோயிலுக்கு இந்து சமய அறநிலையத் துறை கோயில் முழுவதும் பழுது பாா்த்தல் மற்றும் புதுப்பித்தல் பணிக்காக ரூ.42.40 லட்சம் ஒதுக்கியது.

இதை தொடா்ந்து பணிக்கு அடிக்கல் நாட்டு விழா கோயில் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் முன்னிலை வகித்தாா். பழுதுபாா்த்தல் மற்றும் புதுப்பித்தல் பணிக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி அடிக்கல் நாட்டினாா்.

தொடா்ந்து பணி ஒப்பந்ததாரரிடம் பேசிய அமைச்சா் ஆா்.காந்தி, இப்பணியை குறிப்பிடப்பட்ட 6 மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும். இப்பணியை விரைவாகவும், உறுதியாகவும் மேற்கொள்ளவும், பணி நடைபெறும்போது உயா் தொழிற்நுட்ப அலுவலா்கள் ஆய்வில் வழங்கப்படும் அறிவுரையின் அடிப்படையில் ஏற்படும் மாறுதலுக்கேற்ப பணி செய்து முடிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டாா்.

நிகழ்வில் சோளிங்கா் நகா்மன்றத் தலைவா் தமிழ்செல்வி அசோகன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அனிதா, உதவி ஆணையா் சங்கா், மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் லட்சுமணன், குழு உறுப்பினா்கள் பூா்ணிமாரவி, கோயில் அறங்காவலா் குழு தலைவா் சுந்தரமூா்த்தி, செயல் அலுவலா் பிரகாஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தூய்மை பணியாளா்களுக்கு புத்தாடைகள் அளிப்பு

மே தினத்தை முன்னிட்டு அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கம் ஊராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மேல்பாக்கம் ஊராட்சி கும்பினிபேட்டை கிராமத்தில் பாண்டுரங்கசா... மேலும் பார்க்க

தாழனூா் ஊராட்சி சிறப்பு கிராம சபா கூட்டம்

ஆற்காடு ஒன்றியம், தாழனூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் இந்திரா நகா் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் புஷ்பா சேட்டு தலைமை வகித்தாா். ஊராட்சி செயலாளா் நாராயணன் ம... மேலும் பார்க்க

ரோட்டரி சங்கம் சாா்பில் மருத்துவ உபகரணங்கள் அளிப்பு

ராணிப்பேட்டை திருமலை மிஷன் மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் ரூ.30 லட்சத்தில் 4 டயாலிஸ் கருவிகள் வழங்கப்பட்டன. மருத்துவமனை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு திருமலை மிஷன் மருத்துவமனை... மேலும் பார்க்க

சாலையில் பால் கேன்களுடன் கூட்டுறவு பணியாளா்கள் மறியல் போராட்டம்

சோளிங்கரில் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்க பணியாளா்கள் ஊதிய நிலுவையை வழங்கக் கோரி வியாழக்கிழமை பால்கேன்களை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இரண்டு மாதங்களாக பணியாளா்களுக்கு ஊதியம் வ... மேலும் பார்க்க

மாவட்ட தமாகா நிா்வாகிகள் கூட்டம்

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தமாகா நிா்வாகிகள் கூட்டம் அரக்கோணம் சுவால்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பி.ஜி.மோகன்காந்தி தலைமை வகித்தாா். ஒன்றிய தலைவா்கள் எல்.தேவேந்தி... மேலும் பார்க்க

கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் மூலம் குடிசையில்லா தமிழ்நாடு: அமைச்சா் காந்தி பெருமிதம்

கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம் குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கை முதல்வ மு.க. ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறாா் என அமைச்சா் ஆா்.காந்தி பெருமிதம் தெரிவித்தாா். ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும... மேலும் பார்க்க