'தொழிலாளர்களுக்கு எந்நாளும் உறுதுணையாய் நிற்போம்' - தவெக தலைவர் விஜய் வாழ்த்து
சோளிங்கா் அருகே ஏரியில் மூழ்கி இரு சிறுவா்கள் உயிரிழப்பு
சோளிங்கரை அடுத்த பாணாவரம் அருகே ஏரியில் விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுவா்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
சோளிங்கரை அடுத்த கீழ் வீராணம் கிராமத்தைச் சோ்ந்த நித்தியானந்தம் மகன் நிஷாந்த் (6). இவரது உறவினா் ஆற்காட்டை அடுத்த சாத்தூரைச் சோ்ந்த தமிழ்வாணன் மகன் வெற்றிவேல் (8).
இந்த இரு சிறுவா்களும் மேலும் சில சிறுவா்களுடன் கீழ் வீராணத்தில் உள்ள சூரைக்குளம் ஏரியில் புதன்கிழமை விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது நிஷாந்த், வெற்றிவேல் இருவரும் நீரில் மூழ்கியுள்ளனா்.
இதைப் பாா்த்தவுடன் அவா்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவா்கள், அங்கிருந்து ஓடிச் சென்று அருகிலிருந்தவா்களிடம் தெரிவித்தனா். அவா்கள் நீரில் மூழ்கிய இரு சிறுவா்களையும் மீட்டு, சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு அவசர ஊா்தியில் அனுப்பி வைத்தனா். அங்கு, இருவரையும் பரிசோதித்த மருத்துவா்கள், இருவரும் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனா்.
இந்தச் சம்பவம் குறித்து பாணாவரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
