என்இபி யின் உள்ளடக்கங்களை செயல்படுத்த இரு நாள் தேசிய பயிலரங்கு: 64 பல்கலைக்கழக த...
தனுசு: ` உதவ வரும் நபர்; தவிர்க்க வேண்டியது எது?' - ராகு கேது தரும் பலன்கள்
உங்கள் ராசிக்கு, (வாக்கியப் பஞ்சாங்கப்படி) ஏப்ரல் 26 முதல் ராகு பகவான் 3-ம் இடத்திலும் கேது பகவான் உங்கள் ராசிக்கு 9-ம் இடத்திலும் நின்று பலன் தருகிறார்கள். இந்த காலத்தில், கேது பகவான் சற்று அலைக்கழிப்பார். என்றாலும் ராகுபகவானின் ஆதரவால் அதிரடி முன்னேற்றம் உண்டாகும்.
ராகு பகவான் தரும் பலன்கள்
1. எதிலும் வெற்றி உண்டாகும். இதுவரையிலும் நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளில் இருந்துவந்த முட்டுக்கட்டைகள் யாவும், இனி நீங்கும். கடன் தொல்லைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக பைசல் செய்வீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும்.
2. வி.ஐ.பிகள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள் என உங்களின் நட்பு வட்டம் விரிவடையும். வெளியூர்ப் பயணங்கள் திருப்திகரமாக இருக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பயம், கனவுத் தொல்லை, தூக்கமின்மை எல்லாம் நீங்கும்.
3. வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். பாதியிலேயே நின்றுபோன வீடு கட்டும் பணியை முடிக்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். பேச்சில் தெளிவு பிறக்கும்.

4. அடகில் இருந்த நகைகளை மீட்பீர்கள். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். பயணங்களால் அனுகூலம் உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும்.
5. வியாபாரிகளே! பற்று வரவு உயரும். போட்டிகளைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில், உங்களை அலைக்கழித்த மேலதிகாரி மாற்றப்படுவார். புது அதிகாரி உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். கலைஞர்களுக்குப் பெரிய நிறுவனங்களிடமிருந்து புது வாய்ப்பு வரும்.
கேது பகவான் தரும் பலன்கள்
6. கேது பகவான் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் வந்து அமர்கிறார். ஆகவே, வேலைச்சுமை குறையும். பணியிடத்தில் நிம்மதியான சூழல் அமையும். மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல் குழப்பங்கள் மாறும். மூத்த சகோதரர் பக்கபலமாக இருப்பார்.
7. உடல்நிலையில், ரத்த அழுத்த பாதிப்புகள் இனி சீராகும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.என்றாலும் 9-ம் இடத்தில் கேது அமர்வதால், உங்கள் தந்தையாரின் உடல்நிலை சற்று பாதிக்கப்படலாம். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வீணாக வாக்குறுதி கொடுக்காதீர்கள். பத்திரங்களைக் கவனமாகக் கையாளுங்கள்.

8. உங்களை அடிக்கடி பணம் கேட்டு நச்சரித்த அன்பர்கள், இனி உங்களின் நிலைமையைப் புரிந்துகொள்வார்கள். வேலையின்றி தவித்தவர்களுக்கு அயல்நாட் டுத் தொடர்புடைய நிறுவனத்தில் நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பற்று, வரவு உயரும். உத்தியோகத்தில், மரியாதை கூடும். கலைஞர்கள் கிடைக்கும் வாய்ப்பைத் தக்கபடி பயன்படுத்திக் கொள்வீர்கள்.
9. நாகப்பட்டினத்திற்கு அருகே உள்ள நாகூர் சென்று நாகவல்லி சமேத நாகநாதரை வழிபடுங்கள். ஏழை நோயாளிகளுக்கு உதவுங்கள்; தொட்டது துலங்கும்.