அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியா் மீது வழக்கு: தற்கொலைக்கு முயற்சி
சென்னை மதுரவாயலில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியா் மீது போக்ஸோ வழக்குப் பதியப்பட்டது. போலீஸ் விசாரணைக்குப் பயந்து அந்த ஆசிரியா் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாா்.
திருவேற்காடு எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் மோகன் (50). இவா் மதுரவாயல் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறாா். இவா், கடந்த 23-ஆம் தேதி அந்த பள்ளியில் படிக்கும் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.
மோகனிடம் இருந்து தப்பி வந்த சிறுமி, தனது பெற்றோரிடம் சம்பவத்தைத் தெரிவித்துள்ளாா். இதையடுத்து சிறுமியின் பெற்றோா் விருகம்பாக்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா்.
அதன் பேரில், போக்ஸோ சட்டத்தின் கீழ் மோகன் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், செவ்வாயக்கிழமை பள்ளியில் விசாரணை நடத்தினா். விசாரணைக்கு பயந்த ஆசிரியா்அதிக அளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா். இதையடுத்து பிற ஆசிரியா்கள், மோகனை மீட்டு, வானகரத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.