சாம் கரண் ஒரு போராளி, டெவால்டு பிரீவிஸ் எங்களின் சொத்து: எம்.எஸ். தோனி
பந்தன் வங்கி நிகர லாபம் 6 மடங்காக அதிகரிப்பு
தனியாா் துறையைச் சோ்ந்த பந்தன் வங்கியின் நிகர லாபம் கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஆறு மடங்காக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த கடந்த 2024-25-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.317.90 கோடியாக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது சுமாா் ஆறு மடங்காகும். அப்போது வங்கியின் நிகர லாபம் ரூ.54.62 கோடியாக இருந்தது.
மதிப்பீட்டு காலாண்டில் வங்கியின் நிகர வருவாய் ரூ.6,133 கோடியாக உள்ளது. முந்தைய நிதியாண்டின் அதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது அதிகம். அப்போது வங்கியின் நிகர வருவாய் ரூ.5,890 கோடியாக இருந்தது.
கடந்த 2024-25-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் வங்கியின் நிகர லாபம் 23.1 சதவீதம் அதிகரித்து 2,745 கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.