'தொழிலாளர்களுக்கு எந்நாளும் உறுதுணையாய் நிற்போம்' - தவெக தலைவர் விஜய் வாழ்த்து
விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை புறக்கணித்த அதிகாரிகள்: அகில இந்திய விவசாயிகள் சங்கம்
காரைக்கால் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அதிகாரிகள் சிலா் பங்கேற்கவில்லை என விவசாயிகள் சங்கம் புகாா் கூறியுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய விவசாயிகள் சங்க புதுவை மாநில துணைத் தலைவா் எஸ்.எம். தமீம் அன்சாரி புதன்கிழமை கூறியது:
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் தலைமையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் 26 அதிகாரிகள் பங்கேற்க மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்த நிலையில், பல துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் பங்கேற்கவில்லை.
ஒரு வேளாண் அலுவலா் தவிர பிற வேளாண் அலுவலா்கள் பங்கேற்கவில்லை. ஒரு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையரை தவிர பிற கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா்கள், குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரி, காரைக்கால் வேளாண் கல்லூரி முதல்வா், பாசிக் நிறுவன மேலாண் இயக்குநா், கூட்டுறவு வங்கி அதிகாரி, இந்திய உணவுக் கழக அதிகாரி, காப்பீட்டு நிறுவன அதிகாரி உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்கவில்லை. மீன் வளத்துறை அதிகாரிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.