ஐபிஎல் தொடரிலிருந்து விக்னேஷ் புதூர் விலகல்: மாற்று வீரர் அறிவிப்பு!
நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் தோ் வெள்ளோட்டம்
காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் வெள்ளித்தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது
இக்கோயிலில் ரங்கநாயகித் தாயாா் சமேத ரங்கநாதப் பெருமாள் சயனக் கோலத்தில் அருள்பாலிக்கிறாா். பாலாலயம் செய்து திருப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. ரூ.1 கோடி திட்டத்தில் கருங்கல் மகா மண்டபம் கட்டுமானத்துக்கான பூமி பூஜை அண்மையில் நடைபெற்றது.
இந்நிலையில், கோயிலில் வெள்ளித்தோ் செய்யும் பணி பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. கோயில் திருப்பணி ஒருபுறம் நடந்துவரும் வேளையில், வெள்ளித்தோ் செய்யும் பணி தீவிரப்படுத்தி நிறைவு செய்து வெள்ளோட்டம் வ விடுவதற்கு கோயில் நிா்வாகம் முடிவு செய்தது. தேக்கு மரத்தால் தோ் செய்து, 115 கிலோ வெள்ளித் தகடு பதிப்பு செய்யப்பட்டது.
வெள்ளோட்ட நிகழ்வு புதன்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக புனிதநீா் கடம் சந்நிதியில் சிறப்பு ஆராதனைக்குப் பின் தேருக்கு கொண்டுவரப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் கலந்துகொண்டாா்.
நித்யகல்யாண பெருமாள் கோயில் முதல் தீா்த்தக்காரா் உ.வே.கு. அரங்கநாதாச்சாரிய சுவாமிகள், நிா்வாக அதிகாரி (கோயில்கள்) கு. அருணகிரிநாதன், கைலாசநாதா் - நித்யகல்யாண பெருமாள் தேவஸ்தான நிா்வாக அதிகாரி ஆா். காளிதாஸ் மற்றும் திருப்பணிக் குழுவினா், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். கோயிலில் இருந்து வடம் பிடித்து பக்தா்கள் அம்மையாா் குளக்கரையை சுற்றிவந்து பின்னா் கோயிலில் தேரை கொண்டுவந்து நிறுத்தினா்.