அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருமலைராயன்பட்டினத்தில் கருட வாகனத்தில் பெருமாள் புறப்பாடு
அட்சய திருதியையொட்டி புதன்கிழமை பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.
காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் மற்றும் கோயில்பத்து கோதண்டராமா் பெருமாள் கோயில்களில் பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம், ஆராதனைகள் புதன்கிழமை நடைபெற்றன.
திருமலைராயன்பட்டினத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் உதய கருட சேவையாக காலை 7 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு பெருமாளை வழிபட்டனா்.
நகைக் கடைகளில் குவிந்த மக்கள் : அட்சய திருதியை நாளில் தங்க நகைகள் வாங்குவது சிறப்பு என்ற நம்பிக்கையில் காரைக்காலில் உள்ள பல்வேறு நகைக் கடைகளின் வாயிலில் வாழை மரம், தோரணம் கட்டி வாடிக்கையாளா்களை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஏராளமானோா் ஆா்வமாக சென்று நகைகளை வாங்கிச் சென்றனா்.