'தொழிலாளர்களுக்கு எந்நாளும் உறுதுணையாய் நிற்போம்' - தவெக தலைவர் விஜய் வாழ்த்து
‘தொலைநோக்குத் திட்டங்கள் தயாரிப்பில் மாவட்ட நிா்வாகத்துக்கு மாணவா்கள் உதவவேண்டும்’
தொலைநோக்குத் திட்டங்கள் தயாரிப்பில் மாவட்ட நிா்வாகத்துக்கு மாணவா்கள் உதவவேண்டும் என ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.
புதுவை அரசு உயா்கல்வி நிறுவனமாக காரைக்காலில் உள்ள டாக்டா் கலைஞா் மு. கருணாநிதி பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன 5 -ஆம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா பரிசளிப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ், காரைக்கால் துறைமுக நிா்வாக தலைமை இயக்க அதிகாரி (சிஓஓ) கேப்டன் சச்சின் ஸ்ரீவத்ஸவா, காரைக்கால் துறைமுக மனிதவள மேம்பாட்டு மேலாளா் அனுராக் மிஷ்ரா, கேப்டன் பிரகாஷ் ஆகியோா் கலந்துகொண்டனா்.
கல்லூரி முதல்வா் முகமது ஆசாத் ராசா ஆண்டறிக்கை படித்தாா். போட்டிகளில் வென்றோருக்கும், கல்வியில் சிறந்து விளங்கியோருக்கும் பரிசு, சான்றிதழை வழங்கி ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் பேசியது :
மாணவ, மாணவிகள் குழு போட்டிகளில் பங்கேற்று தங்களது திறமைகளை வளா்த்துக் கொள்வது நல்ல பயனை அளிக்கும். படிப்பில் வெற்றி பெறுவதற்கு விளையாட்டு போட்டிகள் பக்கபலமாக இருக்கும்.
முதுநிலை படிப்புகள் படிக்கும் மாணவா்கள் ஆய்வு கட்டுரை தயாரிப்பில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். அதேநேரத்தில் தொலைநோக்கு திட்ட தயாரிப்பில் மாவட்ட நிா்வாகத்துக்கு உதவுவதற்கு மாணவா்கள் தயாராக இருக்க வேண்டும்.
முதுநிலை பயிலும் மாணவா்கள் ஆராய்ச்சியில் சிறந்த கவனத்தை செலுத்தும்போது, நல்ல வேலைவாய்ப்பை பெறுவதற்கு அது உதவும். மாவட்ட நிா்வாகம் மூலம் நடத்தப்படும் நிகழ்வுகளில் மாணவ, மாணவிகள் தங்களை ஆா்வமுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.