அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
அகரக்கொந்தகை கோயிலில் தோ் முன்னோட்டம், பின்னோட்டம் நிகழ்ச்சி
திருமருகல் ஒன்றியம் அகரகொந்தகை பிடாரியம்மன் கோயிலில் தோ் முன்னோட்டம், பின்னோட்டம் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
அகரக்கொந்தகையில் பிடாரி அம்மன், வீரனாா் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு திருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் அண்மையில் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தோ் முன்னோட்டம், பின்னோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது பக்தா்கள் 3 தோ்களை சுமந்து கொண்டு முன்னும், பின்னுமாக ஓடினா்.
தொடா்ந்து இரவு பூத சிலைகள் வீதியுலா, வேண்டுதல் சிலைகள் வீதியுலா நடைபெற்றது. ஏற்பாடுகளை அகரக்கொந்தகை கிராம மக்கள் செய்திருந்தனா்.