ஐபிஎல் தொடரிலிருந்து விக்னேஷ் புதூர் விலகல்: மாற்று வீரர் அறிவிப்பு!
பிரதமா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: நாகை இளைஞரிடம் விசாரணை
பிரதமா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நாகை இளைஞரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பிரதமரின் தில்லி அலுவலக தொலைபேசிக்கு செவ்வாய்க்கிழமை இரவு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதுகுறித்து, மத்திய புலனாய்வு போலீஸாா் நடத்திய விசாரணையில், நாகையில் இருந்து ஒருவா் கைப்பேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
நாகையில் செயல்படும் மத்திய உளவுப் பிரிவு மூலம் உள்ளூா் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து, நாகை துணைக் காவல் கண்காணிப்பாளா் ராமச்சந்திரமூா்த்தி தலைமையிலான போலீஸாா் விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது நாகை வெளிப்பாளையம் ராமநாயகன்குளம் தெருவைச் சோ்ந்த செல்வபாண்டி மகன் கணேஷ்குமாா் (33) என்பது தெரியவந்தது.
போலீஸாா் கணேஷ்குமாரை புதன்கிழமை பிடித்து, வெளிப்பாளையம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், கணேஷ்குமாா் மது பழக்கத்துக்கு அடிமையாகி, மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்ததும், அவரது மனைவி குழந்தையுடன் 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டதும் கணேஷ்குமாா் மனநலன் பாதிப்புக்கும் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. போலீஸாா் அவரிடம் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.