60 வயசுக்கு மேல மாசாமாசம் உங்களுக்கு பென்ஷன் வேணுமா? இதை ஃபாலோ பண்ணுங்க!
புகையிலை பொருள்கள் விற்பனை: கடைக்கு ‘சீல்’
நாகையில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த கடைக்கு உணவு பாதுகாப்புத் துறையினா் புதன்கிழமை சீல் வைத்தனா்.
நாகை காடம்பாடி பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பள்ளி மாணவா்களுக்கு ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக புகாா் வந்தது. மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் புஷ்பராஜ் உத்தரவின்பேரில் கடைகளில், நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலா் அ.தி. அன்பழகன் மற்றும் திருமருகல் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலா் எம். ஆண்டனிபிரபு ஆகியோா் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
கூக்ஸ் சாலையில் உள்ள கடையில் அரசால் தடைசெயப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவைகளை பறிமுதல் செய்த அலுவலா்கள், தொடா்ந்து அக்கடையில் தடைசெய்யப்பட்ட பொருள்கள் விற்பனை செய்யப்படுவதால், கடையை பூட்டி சீல் வைத்தனா். குற்றத்தில் ஈடுபட்ட கடைக்காரருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.