`கட்டாயக் கடன் வசூல் மசோதா' - யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்? - பின்னணி என்ன? |...
எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் புதிதாக ரூ. 197 கோடியில் 2 நிலக்கரி இறக்கும் இயந்திரங்கள்
எண்ணூா் துறைமுகத்தில் கப்பலில் இருந்து நிலக்கரி இறக்குவதற்காக நிறுவப்பட்டுள்ள ரூ. 197 கோடி மதிப்பிலான புதிய இயந்திரங்களின் செயல்பாட்டை மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தாா்.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் மின்வாரியத்தின் அனல்மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி, வெளிமாநிலங்களிலிருந்து கப்பல் மூலம் எண்ணூா் காமராஜா் துறைமுகத்துக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னா் கப்பலில் இருந்து இயந்திரங்கள் மூலம் நிலக்கரி இறக்கப்பட்டு, அங்கிருந்து அனல்மின் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்நிலையில், கப்பலிலிருந்து நிலக்கரியை கீழே இறக்கும் பகுதியான பொ்த் 3-இல் (இறங்கு தளம்), தமிழ்நாடு மின்வாரியம் சாா்பில் ரூ. 197 கோடி மதிப்பில் கூடுதலாக இரண்டு நிலக்கரி இறக்கும் இயந்திரங்கள் புதிதாக வைக்கப்பட்டுள்ளன. இதன் செயல்பாட்டை தமிழ்நாடு மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தாா்.
இந்த இயந்திரங்கள்மூலம் 1,20,000 டி.டபள்யூ.டி கொள்ளளவு திறன் கொண்ட கப்பலில் இருந்து நிலக்கரியை இறக்க முடியும். ஒவ்வொரு இயந்திரங்களும் மணிக்கு 2,600 டன் நிலக்கரியை இறக்கும் திறன் கொண்டவை. இதன்மூலம் வடசென்னை அனல்மின் நிலையம் நிலை 3-இன் பாய்லா் பங்கா்களுக்கு நிலக்கரிகளை நேரடியாக கொண்டு செல்ல முடியும்.
மேலும், இந்த இயந்திரங்கள்மூலம் வடசென்னை அனல்மின் நிலையம் நிலை 1 மற்றும் 2-இன் நிலக்கரி கிடங்கு மற்றும் பாய்லா் பங்கா்களுக்கும் நிலக்கரியை கொண்டு செல்வதற்கான சிறப்பு அமைப்புகளும் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த தொடக்க நிகழ்ச்சியில், வடசென்னை அனல்மின் நிலையம் நிலை 2-இன் தலைமைப் பொறியாளா் என்.பி.சண்முக சேதுபதி, எண்ணூா் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் நிலைய திட்டத்தின் தலைமைப் பொறியாளா் யு.வள்ளியம்மை மற்றும் உயா் அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.