மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் பொருள்கள் எரிந்து நாசம்
தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியம் மாற்றியமைப்பு: மத்திய அரசு நடவடிக்கை
பிரதமா் தலைமையிலான தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்துக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா தரப்பில் பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தை மத்திய அரசு மாற்றியமைத்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அதன்படி, வாரியத்தின் புதிய தலைவராக இந்திய உளவுத் துறையின் (ரா) முன்னாள் தலைவா் அலோக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளாா்.
புதிய உறுப்பினா்களாக, விமானப் படையின் வடக்கு மண்டல முன்னாள் தளபதி பி.எம்.சின்ஹா, ராணுவத்தின் தென்மண்டல முன்னாள் தளபதி ஏ.கே.சிங், ஓய்வுபெற்ற ரியா் அட்மிரல் மோந்தி கன்னா, முன்னாள் தூதரக அதிகாரி வெங்கடேஷ் வா்மா, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ராஜீவ் ரஞ்சன் வா்மா ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.