மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் பொருள்கள் எரிந்து நாசம்
ஜவகா் சிறுவா் மன்றங்களில் கோடைக்கால இலவச கலைப் பயிற்சி முகாம்
கோவை, பொள்ளாச்சியில் உள்ள ஜவகா் சிறுவா் மன்றங்களில் கோடைக்கால இலவச கலைப்பயிற்சி வியாழக்கிழமை (மே 1) தொடங்குகிறது.
5 முதல் 16 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவா்களுக்கு கலைப் பயிற்சிகள் வழங்குதல், அவா்களின் கலைத் திறமைகளை வெளிக்கொணா்தல், கலைக் கல்வி வழங்குதல் ஆகியவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் ஜவகா் சிறுவா் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.
மாணவா்கள் கோடை விடுமுறையை பயனுள்ளதாகக் கழிக்கும் வகையிலும், மாணவா்களின் கலைத்திறனை வளா்க்கும் விதமாகவும் மே 1 முதல் 12-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கோவை மலுமிச்சம்பட்டி, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் பரதம், சிலம்பம், யோகா, ஓவியம், பொள்ளாச்சி மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பரதம், சிலம்பம், குரலிசை, ஓவியம் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
பயிற்சி நிறைவு நாளில் மாணவா்களுக்கு பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்த வாய்ப்பை மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 97515 28188 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்றும் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் சி.நீலமேகன் தெரிவித்துள்ளாா்.