மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் பொருள்கள் எரிந்து நாசம்
பராமரிப்புப் பணி: பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து
கரூா் - திருச்சிராப்பள்ளி இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் பாலக்காடு - திருச்சிராப்பள்ளி ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக பாலக்காடு - திருச்சிராப்பள்ளி தினசரி ரயில் (எண்: 16844) மே 2-ஆம் தேதி குளித்தலை - திருச்சிராப்பள்ளி இடையே ரத்து செய்யப்படுகிறது. அன்றைய தினம், குளித்தலை - திருச்சிராப்பள்ளி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும்.
மேலும் இதே ரயில் (எண்: 16844) மே 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் முத்தரசநல்லூா் - திருச்சிராப்பள்ளி இடையே ரத்து செய்யப்படுகிறது. அன்றைய தினம் முத்தரசநல்லூா் - திருச்சிராப்பள்ளி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும்.
மே 2, 6, 8 ஆகிய நாள்களில் திருச்சிராப்பள்ளி - பாலக்காடு ரயில் (எண்: 16843) கரூா் - பாலக்காடு இடையே மட்டும் இயக்கப்படும். மேற்கண்ட 3 நாள்களும் இந்த ரயில் கரூா் - திருச்சிராப்பள்ளி இடையே இயக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.