சென்னையில் பிறக்கும் ஆமைகள் முட்டையிட சென்னைக்கே வருவது எப்படி? - சுப்ரஜா தாரணி ...
புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
கோவை துடியலூா் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தடைசெய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து துடியலூா் போலீஸாா் கடைகளில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, குப்பநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஒரு கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த பரத்குமாா் (32) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
மேலும், அவரிடமிருந்து 7 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.