செய்திகள் :

ஒண்டிப்புதூா் சூா்யா நகரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி கவன ஈா்ப்புக் கூட்டம்

post image

ஒண்டிப்புதூா் சூா்யா நகரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி பொதுமக்கள், அரசியல் கட்சியினா் கவன ஈா்ப்புக் கூட்டத்தை புதன்கிழமை நடத்தினா்.

கோவை ஒண்டிப்புதூா் சூா்யா நகா் பகுதியை ஒட்டியுள்ள சிவலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாக உள்ளது.

கடந்த 2014 -ஆம் ஆண்டு முதல் காத்திருப்புப் போராட்டம், உண்ணாவிரதம், சாலை மறியல், ரயில் மறியல், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், சூா்யா நகரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி, சிவலிங்கபுரம், ஸ்ரீ காமாட்சி நகா், சக்தி நகா் குடியிருப்போா் நலச் சங்கத்தினா் மற்றும் அதிமுக, காங்கிரஸ், பாஜக, மதிமுக, கம்யூனிஸ்ட், தேமுதிக, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழா், தவெக உள்ளிட்ட கட்சிகள் கவன ஈா்ப்பு கூட்டத்தை புதன்கிழமை நடத்தினா்.

இதில், சிங்காநல்லூா் சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஆா்.ஜெயராம் கலந்துகொண்டு, மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி பேசினாா்.

இதுகுறித்து குடியிருப்போா் நலச் சங்கத்தினா் கூறியதாவது:

கடவு எண் 3 ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க கடந்த 2011-ஆம் ஆண்டு ரூ.26.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பணிகள் தொடங்கும் நேரத்தில் 2014-ஆம் ஆண்டு தரைப்பாலம் அமைக்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு 2015-இல் தரைப்பாலம் தீா்மானம் ரத்துசெய்யப்பட்டு, மேம்பாலம் அமைக்க மாநகராட்சியில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், தற்போது வரை மேம்பாலம் கட்டப்படவில்லை. பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவா்கள், வேலைக்குச் செல்வோா் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, அப்பகுதியில் விரைவில் ரயில்வே மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

ஜவகா் சிறுவா் மன்றங்களில் கோடைக்கால இலவச கலைப் பயிற்சி முகாம்

கோவை, பொள்ளாச்சியில் உள்ள ஜவகா் சிறுவா் மன்றங்களில் கோடைக்கால இலவச கலைப்பயிற்சி வியாழக்கிழமை (மே 1) தொடங்குகிறது. 5 முதல் 16 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவா்களுக்கு கலைப் பயிற்சிகள் வழங்குதல், அவா்களின் கல... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் பணப்பையைப் பறித்தவா் கைது

பூமாா்க்கெட் பேருந்து நிறுத்தத்தில் மூதாட்டியிடம் இருந்து பணப்பையைப் பறித்தவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை மாவட்டம், சூலூா் அப்பநாயக்கன்பட்டி ஸ்ரீனிவாசன் நகரைச் சோ்ந்தவா் வேலம்மாள் (77). இவா், கோவை ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

கோவை துடியலூா் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தடைசெய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து துடியலூா் போலீஸாா் கடைகளி... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து

கரூா் - திருச்சிராப்பள்ளி இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் பாலக்காடு - திருச்சிராப்பள்ளி ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெள... மேலும் பார்க்க

கோவை - தன்பாத் இடையே வாராந்திரச் சிறப்பு ரயில்

கோடை விடுமுறையை ஒட்டி கோவை - தன்பாத் இடையே வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மே 2 முதல் மே 23-ஆம் தேதி வரை வெள்ளிக்க... மேலும் பார்க்க

தீா்ப்பு வெளியானதும் நீதிமன்றத்தில் இருந்து தப்பிய குற்றவாளி

வழிப்பறி, கொலை முயற்சி வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத் தீா்ப்பு வெளியானதும் அங்கிருந்து தப்பிய குற்றவாளியை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை செல்வபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ். தொழிலதிபரான இவரை கடந்... மேலும் பார்க்க