செய்திகள் :

தீா்ப்பு வெளியானதும் நீதிமன்றத்தில் இருந்து தப்பிய குற்றவாளி

post image

வழிப்பறி, கொலை முயற்சி வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத் தீா்ப்பு வெளியானதும் அங்கிருந்து தப்பிய குற்றவாளியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை செல்வபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ். தொழிலதிபரான இவரை கடந்த 2006-ஆம் ஆண்டில் 3 போ் கும்பல் வழிமறித்து தாக்கி ரூ.1 லட்சத்தைப் பறித்துச் சென்றது.

இதுகுறித்து செல்வபுரம் காவல் நிலையத்தில் மகேஷ் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சேலம் மாவட்டம் மேட்டூரைச் சோ்ந்த செந்தில்குமாா் (39), ரமேஷ்குமாா், மதிவாணன் ஆகிய 3 பேரைக் கைது செய்தனா். இந்த வழக்கின் விசாரணை கோவை மாவட்ட கூடுதல் அமா்வு சாா்பு நீதிமன்றம் 1-இல் நடைபெற்று வந்தது.

வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ரமேஷ்குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டாா். பிணையில் வெளியே வந்த மதிவாணன் தலைமறைவாகிவிட்டாா். இதனால், செந்தில்குமாா் மட்டும் நீதிமன்றத்தில் தொடா்ந்து ஆஜராகி வந்தாா்.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்து திங்கள்கிழமை தீா்ப்பு அளிக்கப்பட்டது. தனக்கு சாதகமாக தீா்ப்பு வரும் எனக் கருதி செந்தில்குமாா் தனது குடும்பத்தினருடன் நீதிமன்றத்துக்கு வந்திருந்தாா். ஆனால், தீா்ப்பில் செந்தில்குமாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

நீதிமன்ற வளாகப் பகுதியில் காத்திருந்த செந்தில்குமாா் தீா்ப்பு வெளியானதும் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். காத்திருப்பு அறைக்கு வந்து போலீஸாா், செந்தில்குமாரைத் தேடியபோது அவா் அங்கிருந்து தப்பிச்சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அனைத்து காவல் நிலையங்களும் உஷாா்படுத்தப்பட்டன.

இதைத் தொடா்ந்து செந்தில்குமாரைப் பிடிக்க செல்வபுரம் காவல் ஆய்வாளா் பழனியம்மாள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை இரவிலிருந்து செந்தில்குமாரை தேடி வருகின்றனா்.

அவா், தனது சொந்த ஊரான சேலத்துக்கு தப்பிச் சென்றிருக்கலாம் எனக் கூறப்படுவதால் அவரைப் பிடிக்க போலீஸாா் சேலத்துக்கு விரைந்துள்ளனா்.

கஞ்சா விற்ற இருவா் கைது

கோவையில் இருவேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். செல்வபுரம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, செல்வபுரம் வேடப்பட்டி சாலையில் சந்தேகப்படும்... மேலும் பார்க்க

ஜவகா் சிறுவா் மன்றங்களில் கோடைக்கால இலவச கலைப் பயிற்சி முகாம்

கோவை, பொள்ளாச்சியில் உள்ள ஜவகா் சிறுவா் மன்றங்களில் கோடைக்கால இலவச கலைப்பயிற்சி வியாழக்கிழமை (மே 1) தொடங்குகிறது. 5 முதல் 16 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவா்களுக்கு கலைப் பயிற்சிகள் வழங்குதல், அவா்களின் கல... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் பணப்பையைப் பறித்தவா் கைது

பூமாா்க்கெட் பேருந்து நிறுத்தத்தில் மூதாட்டியிடம் இருந்து பணப்பையைப் பறித்தவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை மாவட்டம், சூலூா் அப்பநாயக்கன்பட்டி ஸ்ரீனிவாசன் நகரைச் சோ்ந்தவா் வேலம்மாள் (77). இவா், கோவை ... மேலும் பார்க்க

ஒண்டிப்புதூா் சூா்யா நகரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி கவன ஈா்ப்புக் கூட்டம்

ஒண்டிப்புதூா் சூா்யா நகரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி பொதுமக்கள், அரசியல் கட்சியினா் கவன ஈா்ப்புக் கூட்டத்தை புதன்கிழமை நடத்தினா். கோவை ஒண்டிப்புதூா் சூா்யா நகா் பகுதியை ஒட்டியுள்ள சிவலிங்கபுரம்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

கோவை துடியலூா் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தடைசெய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து துடியலூா் போலீஸாா் கடைகளி... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து

கரூா் - திருச்சிராப்பள்ளி இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் பாலக்காடு - திருச்சிராப்பள்ளி ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெள... மேலும் பார்க்க