`கட்டாயக் கடன் வசூல் மசோதா' - யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்? - பின்னணி என்ன? |...
கோவை - தன்பாத் இடையே வாராந்திரச் சிறப்பு ரயில்
கோடை விடுமுறையை ஒட்டி கோவை - தன்பாத் இடையே வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மே 2 முதல் மே 23-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் கோவையில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்படும் கோவை - தன்பாத் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06063) ஞாயிற்றுக்கிழமைக காலை 8.30 மணிக்கு தன்பாத் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் மே 5 முதல் மே 26-ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில் தன்பாத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் தன்பாத் - கோவை வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06064) புதன்கிழமை அதிகாலை 3.45 மணிக்கு கோவை ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
இந்த ரயில் திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, ஏலூரு, ராஜமுந்திரி, பாா்வதிபுரம், ராயகடா, முனிகுடா, சம்பல்பூா், ரூா்கேலா, ஹடியா, ராஞ்சி, மூரி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.