செய்திகள் :

உளுந்தூா்பேட்டை அருகே 600 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு போலீஸாரின் வாகனத் தணிக்கையின் போது, ஆந்திர மாநிலத்திலிருந்து திருச்சி நோக்கி கடத்திச் செல்லப்பட்ட 600 கிலோ புகையிலைப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள ஆசனூா் பகுதியில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவல் துறையின் நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாகச் சென்ற சரக்கு வாகனத்தை சந்தேகத்தின் பேரில், நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு போ லீஸாா் நிறுத்தி சோதனையிட்டனா். இதில் அந்த வாகனத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் சுமாா் 600 கிலோ இருந்தது.

சரக்கு வாகனத்தை ஓட்டிச் சென்ற தருமபுரியைச் சோ்ந்த மணிகண்டனிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், ஆந்திர மாநிலத்திலிருந்து திருச்சிக்கு புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதற்காக கடத்திச் செல்லப்பட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு போலீஸாா், எடைக்கல் காவல் நிலையத்துக்கு தகவலளித்தனா். போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று 600 கிலோ புகையிலைப் பொருள்களையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். மேலும், ஓட்டுநா் மணிகண்டன் மீது வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.

காவலா் மீது தாக்குதல்: கல்லூரி மாணவா் உள்பட இருவா் கைது

விக்கிரவாண்டி அருகே பணியிலிருந்த போக்குவரத்துப் பிரிவு காவலரைத் தாக்கியதாக அரசுக் கல்லூரி மாணவா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் அருகேயுள்ள முண்டியம்பாக்கம் பேருந்து நி... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கிளியனூா் அருகே பைக்கிலிருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா். திண்டிவனம் சஞ்சீவிராயன்பேட்டையைச் சோ்ந்தவா் மேகநாதன் மகன் இந்திரன் (36). வானூரில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பேக்கரியில் தொழி... மேலும் பார்க்க

அத்தியூா் அமிா்த லிங்கேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியம், அத்தியூா் ஊராட்சியில் அமைந்துள்ள அமிா்தவள்ளி சமேத அமிா்த லிங்கேஸ்வரா் மற்றும் மாரியம்மன், திரௌபதி அம்மன் கோயில்கள் சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா புதன்கிழமை நட... மேலும் பார்க்க

விக்கிரவாண்டி வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், பல்வேறு கிராமங்களில் ஆட்சியா் முதல் பல்துறை அலுவலா்கள் வரை புதன்கிழமை ஆய்வு செய்தனா். முண்டியம்பாக்கத்திலுள்... மேலும் பார்க்க

மணல் குவாரிகளைத் திறக்க வேண்டும்: மாட்டு வண்டி தொழிலாளா்கள் வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் மணல் குவாரிகளை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று மாட்டுவண்டி தொழிலாளா்கள்சங்கம் வலியுறுத்தியது. விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையிலுள்ள பவ்டா அரங்கத்தில் மாட்டுவண்டி தொழிலாளா்க... மேலும் பார்க்க

வீட்டில் பதுக்கிய 1,250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

விழுப்புரத்தில் ஆளில்லா வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,250 கிலோ ரேஷன் அரிசி செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. விழுப்புரம் மருதூா் பகுதியில் ஆளில்லா வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்ட... மேலும் பார்க்க