60 வயசுக்கு மேல மாசாமாசம் உங்களுக்கு பென்ஷன் வேணுமா? இதை ஃபாலோ பண்ணுங்க!
விக்கிரவாண்டி வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், பல்வேறு கிராமங்களில் ஆட்சியா் முதல் பல்துறை அலுவலா்கள் வரை புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
முண்டியம்பாக்கத்திலுள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தின் இருபுறங்களிலும் தலா 260 மீட்டா் நீளத்துக்கு சாலை அமைத்தல், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்கப்படவுள்ள நிலையில் சாலை விரிவாக்கம் செய்தல் ஆகிய பணிகளை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, விக்கிரவாண்டி பேரூராட்சிக்குள்பட்ட கடைவீதிகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என்பதையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா். மேலும், பொதுமக்களுக்கு தரமான பொருள்களை விற்பனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.
பின்னா், வேம்பி, பாப்பனப்பட்டு கிராமங்களில் பழங்குடி இருளா் இன மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குதல், வி.சாலை கிராமத்தில் சின்ன ஏரியை மேம்படுத்துதல், மேற்குதாங்கல் ஏரியில் தூா்வாரும் பணி, சிறுவாளை கிராமத்தில் தரிசு நிலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருதல் போன்றவை குறித்தும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
இதுபோன்று, பிறதுறை அலுவலா்களும் விக்கிரவாண்டி வட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.