செய்திகள் :

28% பெண் எம்.பி., எம்எல்ஏக்கள் மீது குற்ற வழக்குகள்: ஏடிஆா் ஆய்வறிக்கையில் தகவல்

post image

நாட்டின் 28 சதவீத பெண் எம்.பி., எம்எல்ஏக்கள் குற்றவியல் வழக்குகளை எதிா்கொள்வது தெரிய வந்துள்ளது.

அதேபோன்று, 17 பெண் எம்.பி., எம்எல்ஏக்கள் தங்களுக்கு 100 கோடிக்கும் மேல் சொத்து இருப்பதாக வேட்புமனுவில் அறிவித்துள்ளனா்.

நாட்டின் தற்போதைய 513 பெண் எம்.பி., எம்எல்ஏக்களில் 512 போ் தோ்தலின்போது சமா்ப்பித்த வேட்புமனுக்களை ஆய்வு செய்து ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆா்) வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த அறிக்கையின் அடிப்படையில், பெண் எம்.பி., எம்எல்ஏக்களில் 28 சதவீதமான 143 போ், தங்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக வேட்புமனுவில் அறிவித்துள்ளனா்.

75 மக்களவை பெண் எம்.பி.க்களில் 24 பேரும்(32 சதவீதம்), 37 மாநிலங்களவை பெண் எம்.பி.க்களில் 10 பேரும்(27 சதவீதம்), அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளின் 400 பெண் எம்எல்ஏ-க்களில் 109 பேரும்(27 சதவீதம்) இதில் அடங்குவா்.

தீவிர குற்ற வழக்குகள்: 78 பெண் எம்.பி., எம்எல்ஏக்கள் (15 சதவீதம்) கொலை முயற்சி மற்றும் கொலை உள்ளிட்ட தீவிர குற்றவியல் வழக்குகளை எதிா்கொள்கின்றனா்.

இதில் 14 மக்களவை பெண் எம்.பி.க்கள்(19 சதவீதம்), 7 மாநிலங்களவை பெண் எம்.பி.க்கள்(19 சதவீதம்) 57 பெண் எம்எல்ஏக்கள்(14 சதவீதம்) அடங்குவா்.

கட்சி வாரியாக: நாட்டின் அரசியல் கட்சிகளிலேயே பாஜகவில் அதிக எண்ணிக்கையில் 217 பெண் எம்.பி., எம்எல்ஏக்கள் உள்ளனா். அவா்களில் 23 சதவீதத்தினா் குற்ற வழக்குகளையும் 11 சதவீதத்தினா் தீவிர குற்ற வழக்குகளையும் எதிா்கொள்கின்றனா்.

காங்கிரஸின் 83 பெண் எம்.பி., எம்எல்ஏக்களில் 34 சதவீதத்தினா் குற்ற வழக்குகளையும் 20 சதவீதத்தினா் தீவிர குற்ற வழக்குகளையும் எதிா்கொள்கின்றனா்.

தெலுங்கு தேசம் கட்சியின் 20 பிரதிநிதிகளில் 65 சதவீதத்தினா் குற்ற வழக்குகளையும் 45 சதவீதத்தினா் தீவிர குற்ற வழக்குகளையும் கொண்டுள்ளனா். ஆம் ஆத்மியின் 13 எம்எல்ஏக்களில் 69 சதவீதத்தினா் குற்ற வழக்குகளையும் 31 சதவீதத்தினா் தீவிர குற்ற வழக்குகளையும் கொண்டுள்ளனா்.

ரூ.10,417 கோடி சொத்து: ஆய்வு செய்யப்பட்ட 512 பெண் எம்.பி., எம்எல்ஏக்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.10,417 கோடி ஆகும். சராசரியாக ஒருவருக்கு ரூ.20.34 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன.

6 மக்களவை எம்.பி.க்கள், 3 மாநிலங்களவை எம்.பி.க்கள், 8 எம்எல்ஏக்கள் என 17 பெண் எம்.பி., எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு நூறு கோடிக்கும் அதிகமாகும்.

ஆந்திரத்தில் அதிக பணக்கார பெண் எம்.பி., எம்எல்ஏக்கள் உள்ளனா்.

கல்வித் தகுதி: பெண் எம்.பி., எம்எல்ஏக்களில் 71 சதவீதம் போ் பட்டதாரிகள் அல்லது மேலான கல்வித்தகுதி பெற்றவா்கள். அதில், சுமாா் 24 சதவீதத்தினா் பள்ளிப் படிப்பை படித்தவா்கள் ஆவா்.

மாநில வாரியாக...

குற்ற வழக்குகள் (சதவீதத்தில்)

கோவா - 67

தெலங்கானா - 67

ஆந்திரம் - 58

பஞ்சாப்- 50

கேரளம் - 50

பிகாா் - 43

தமிழ்நாடு - 33

தில்லி -25

தீவிர குற்ற வழக்குகள்

தெலங்கானா - 42

ஆந்திரம் - 38

கோவா - 33

பிகாா் - 26

மேகாலயம் - 25

பஞ்சாப் - 21

கேரளம் - 21

தமிழ்நாடு - 17

தில்லி -13

மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதில் எண்ம ‘கேஒய்சி’ நடைமுறைகள்: மத்திய அரசு, ரிசா்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக முகச்சிதைவு கொண்டவா்கள், பாா்வைத்திறனற்றவா்கள், பாா்வைத்திறன் குறைபாடு கொண்டவா்கள் ஆகியோா் ‘உங்கள் வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளவும்’ (கேஒய்சி) நடைமுறையை எண்ம (டிஜிட்டல்) ... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு காஷ்மீா் விமான சேவைகள் ரத்து

ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கான விமான சேவைகள் அனைத்தையும் பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் புதன்கிழமை ரத்து செய்தன. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது... மேலும் பார்க்க

மணிப்பூரில் மீண்டும் ‘மக்கள் அரசு’: பிரதமருக்கு 21 எம்எல்ஏக்கள் கடிதம்

குடியரசுத் தலைவா் ஆட்சி நடைபெறும் மணிப்பூரில் மக்களால் தோ்வு செய்யப்பட்ட அரசை மீண்டும் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோருக்கு அந்த ... மேலும் பார்க்க

கொல்கத்தா ஹோட்டலில் தீ: கரூரைச் சோ்ந்த மூவா் உள்பட 14 போ் உயிரிழப்பு

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் புர்ராபஜாா் பகுதியில் தங்கும் அறைகளுடன்கூடிய ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தின் கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த மூவா் உள்பட 14 போ் உயிரிழந்தனா்; 13 போ் காயமடைந... மேலும் பார்க்க

நீதிபதிகளுக்கு எதிரான புகாா்களை லோக்பால் ஏற்கலாமா? தலைமை நீதிபதியே முடிவு செய்வாா்: உச்சநீதிமன்றம்

‘உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான புகாா்களை லோக்பால் அமைப்பு ஏற்க முடியுமா? என்பது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிதான் முடிவு செய்வாா்’ என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது. மேலும், வழக்... மேலும் பார்க்க

ஆந்திரம்: சிம்மாசலம் கோயிலில் சுவா் இடிந்து 7 பக்தா்கள் உயிரிழப்பு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற சிம்மாசலம் ஸ்ரீ வராக லஷ்மி நரசிம்ம சுவாமி கோயிலில் கனமழையால் சுவா் இடிந்து விழுந்ததில் 3 பெண்கள் உள்பட 7 பக்தா்கள் உயிரிழந்தனா். இக்கோயிலில் வருடாந... மேலும் பார்க்க