செய்திகள் :

மாணவிக்குப் பாலியல் தொல்லை? விசாரணைக்குப் பயந்து தூக்க மாத்திரை சாப்பிட்ட ஆசிரியர்; என்ன நடந்தது?

post image

சென்னையைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அரசுப் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 23.4.2025-ம் தேதி பள்ளி முடிந்து வீட்டுக்குச் சிறுமி புறப்பட்டார். அப்போது சிறுமி படிக்கும் பள்ளியில் பணியாற்றும் அறிவியல் ஆசிரியர் மோகன் என்பவர், சிறுமியின் கையைப் பிடித்து, `உன்னிடம் தனியாகப் பேச வேண்டும்' என வகுப்பறைக்குள் அழுத்துச் சென்றிருக்கிறார்.

பின்னர் சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி வகுப்பறையிலிருந்து வெளியில் ஓடிவந்தார்.

பின்னர் தனக்கு நடந்த கொடுமைகளை அதே பள்ளியில் பணியாற்றும் பெண் ஆசிரியை ஒருவரிடம் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

இதையடுத்து அந்தப் பெண் ஆசிரியைச் சிறுமியை அழைத்துக் கொண்டு பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் சென்று விவரத்தைக் கூறினார்.

உடனே சிறுமியிடம் தலைமை ஆசிரியர் என்ன நடந்தது என்று விசாரித்தார். சிறுமி அளித்த தகவலின்படி அவருக்குத் தொல்லை கொடுத்த அறிவியல் ஆசிரியர் மோகன் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாகப் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்குத் தலைமை ஆசிரியர் தகவல் தெரிவித்தார்.

மாத்திரை

அதைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அறிவியல் ஆசிரியர் மோகனிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது ஆசிரியர் மோகன் தன் தரப்பு விளக்கத்தை அளித்திருக்கிறார். இந்தநிலையில் சிறுமியின் அம்மா, கடந்த 29.4.2025-ல் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அதன்பேரில் போலீஸார், சிறுமி படிக்கும் அரசுப் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அறிவியல் ஆசிரியர் மோகன், திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.

அப்போது அவர் விசாரணைக்குப் பயந்து தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டது தெரியவந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆசிரியர் மோகனுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் அவரிடம் போலீஸார் விசாரணை நடத்த முடியவில்லை.

சிகிச்சைக்குப் பிறகு விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

திருமணம் மீறிய உறவு; 5 வயது சிறுவனுக்குப் பாலியல் தொல்லை; நண்பரோடு கைதான இளைஞர்; பின்னணி என்ன?

திருச்சி, ஏர்போர்ட் வசந்த நகரைச் சேர்ந்தவர் நாசர் அலி (வயது: 30). இவர், கே.கே நகர்ப் பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்.இவருக்கும் திருமணமான ஒரு பெண்ணுக்கும் திருமணம் மீறிய உறவு இருந்து வந்துள்ள... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு; இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற நண்பர்கள்.. மது போதையில் வெறிச்செயல்

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே வசிக்கும் சரோஜா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை இருக்கும் நிலை... மேலும் பார்க்க

`வங்கியில் ரூ.8 கோடி மோசடி' - மகாராஷ்டிரா அமைச்சர் மீது வழக்கு.. நடந்தது என்ன?

ராதாகிருஷ்ண விகே பாட்டீல் யார்?மகாராஷ்டிரா பா.ஜ.க கூட்டணி அரசில் நீர்வளத்துறை அமைச்சராக இருப்பவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் தனது மகனுக்கு காங்கிரஸ் கட்சி சீட் கொடுக்க... மேலும் பார்க்க

`இட்லி பார்சல், ரூ.8 கூடுதலாக வாங்கிய உணவகத்துக்கு ரூ.30,000 அபராதம்' - நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி

விழுப்புரம் வழுதரெட்டி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர், அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொது நலச் சங்கத்தின் மாநிலத் தலைவராக உள்ளார். இவர் கடந்த 2022 -ம் ஆண்டு செப்டம்... மேலும் பார்க்க

நிதியமைச்சர் நிர்மலா பெயரில் போலி வீடியோ; ரூ.33 லட்சம் இழந்த காங்கிரஸ் நிர்வாகி.. என்ன நடந்தது?

நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த 50 வயதான காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கிறார். ஆன்லைன் வர்த்தகம் மூலம் வருவாய் ஈட்டுவதற்கான முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டு வந்ததா... மேலும் பார்க்க

சிறுமி கொலை வழக்கில் பெரியம்மாவுக்கு ஆயுள் தண்டனை - ராணிப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பு

ராணிப்பேட்டை மாவட்டம், செட்டிதாங்கல் கிராமத்தைச் சேர்ந்த காந்தி - ராஜேஸ்வரி தம்பதியின் மூன்றரை வயது மகள் கோபிகா. கடந்த 30-11-2020 அன்று மதியம் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி கோபிகா திடீரெ... மேலும் பார்க்க