சாதிவாரிக் கணக்கெடுப்பு: காங்கிரஸ் கொள்கையை பாஜக ஏற்றுள்ளது - ராகுல்
சாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் கொள்கையை பாஜக ஏற்றுள்ளதாக அக்கட்சியின் மக்களவைக் குழு தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய ராகுல் காந்தி,
சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்துபடி பலமுறை பாஜக அரசிடம் கேட்டுள்ளோம். 11 ஆண்டுகளுக்குப் பிறகு சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புக்கொண்டுள்ளார்.
சாதிவாரிக் கணக்கெடுப்பில் பல முக்கிய கேள்விகளுக்கு பதில் இல்லை எனக் குறிப்பிட்டார்.