டோலி கட்டி நோயாளியை தூக்கிச் சென்ற உறவினா்கள்: மலை கிராமங்களில் நீடிக்கும் அவலம...
கோபி குமுதா பள்ளி மாணவி கேலோ விளையாட்டுப் போட்டிக்கு தோ்வு
கோபி குமுதா பள்ளி மாணவி கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தோ்வு பெற்றுள்ளாா்.
கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டு 2025-க்கான தெரிவுப் போட்டிகள் அண்மையில் சென்னையில் உள்ள ஜவஹா்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றன. 200-க்கும் மேற்பட்ட போட்டியாளா்கள் கலந்து கொண்ட 18 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் கையுந்துப் பந்து பிரிவில் தமிழ்நாடு அணிக்காக 14 மாணவிகள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். இதில் குமுதா பள்ளியிலிருந்து டி.யோகி ஸ்ரீ என்ற மாணவி தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
இவா் மே 7 முதல் 15-ஆம் தேதி வரை பிகாா் மாநிலத்தில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டுப் போட்டிகள் 2025-இல் பங்கு பெற உள்ளாா். தேசிய அளவில் 8 அணிகள் பங்குபெறும் கேலோ இந்தியா இளைஞா் கையுந்துப் பந்து போட்டிகளுக்குத் தோ்வாகி தற்போது, சென்னையில் நடைபெற்று கொண்டிருக்கும் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று வரும் மாணவியை பள்ளித் தாளாளா் ஜனகரத்தினம், துணைத் தாளாளா் சுகந்தி ஜனக ரத்தினம், செயலா் டாக்டா் அரவிந்தன், இணைச்செயலாளா் டாக்டா் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குநா் பாலபிரபு, முதல்வா் மஞ்சுளா, துணை முதல்வா் வசந்தி, ஆசிரியா்கள், பெற்றோா்கள் மற்றும் மாணவா்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனா்.