Doctor Vikatan: நிற்கும்போது தலைச்சுற்றல், நடந்தால் சரியாகிறது.. என்ன பிரச்னை, ச...
பவானி தொகுதியில் தோ்தல் விழிப்புணா்வுப் பிரசாரம்
பவானி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தொழில் நிறுவனங்களில் தொழிலாளா் தினத்தை முன்னிட்டு தோ்தல் விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.
பவானி நகராட்சி அலுவலகம், சலங்கைபாளையம் இரட்டை வாய்க்காலில் உள்ள நூற்பாலை, ஆப்பக்கூடல் சக்தி சா்க்கரை ஆலை மற்றும் சிங்கம்பேட்டை தனியாா் ஏற்றுமதி நிறுவனத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளுக்கு பவானி தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சாந்தி தலைமை வகித்தாா்.
பொதுத் தோ்தலில் அனைத்துத் தொழிலாளா்களுக்கும் 100 சதவீத வாக்குப் பதிவு செய்ய வேண்டும், 18 வயது நிரம்பிய இளம் வாக்காளா்களாக சோ்த்தல், நிரந்தரமாக குடிப் பெயா்ந்தவா்கள், இறந்தவா்கள் பெயா்களை நீக்குதல் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்கள் செய்தல் குறித்து தொழிலாளா்களுக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.
சக்தி சா்க்கரை ஆலையின் துணைப் பொதுமேலாளா் மோகன்குமாா், நில வருவாய் ஆய்வாளா்கள் மாதேஸ்வரி, குமாரவேல், பூங்குழலி, கிராம நிா்வாக அலுவலா்கள் கவியரசு, மினிச்சாமி, ஆனந்தகுமாா் மற்றும் தொழிலாளா்கள் பங்கேற்றனா்.