திருமணம் மீறிய உறவு; 5 வயது சிறுவனுக்குப் பாலியல் தொல்லை; நண்பரோடு கைதான இளைஞர்; பின்னணி என்ன?
திருச்சி, ஏர்போர்ட் வசந்த நகரைச் சேர்ந்தவர் நாசர் அலி (வயது: 30). இவர், கே.கே நகர்ப் பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்.
இவருக்கும் திருமணமான ஒரு பெண்ணுக்கும் திருமணம் மீறிய உறவு இருந்து வந்துள்ளது. அந்தப் பெண்ணுக்கு 5 வயதில் மகன் உள்ளார்.
இந்நிலையில், நாசர் அலி தன்னுடைய நண்பர் வேலுமணி என்பவருடன் சேர்ந்து அந்தப் பெண்ணின் ஐந்து வயது மகனைத் தனியாக திருவெறும்பூர் அருகே அழைத்துச் சென்று அந்த சிறுவனுக்குக் கட்டாயப்படுத்தி வாயில் மது ஊற்றி இருவரும் சேர்ந்து சிறுவனுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பார்த்து அவர்களைப் பிடிக்கச் சென்றபோது இருவரும் தப்பி ஓடி உள்ளனர். அதனைத் தொடர்ந்து, அவர்களைத் தொடர்ந்து சென்ற அப்பகுதி மக்கள் இருவரையும் பிடித்து திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெண் ஒருவரோடு திருமணம் மீறிய உறவிலிருந்ததோடு, அவரது மகனுக்கும் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் பாலியல் தொல்லைக் கொடுத்துள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88