கொல்கத்தா ஹோட்டல் தீவிபத்தில் இறந்த மூவரின் உடல்களுக்கு மக்கள் அஞ்சலி
துணை முதல்வா் உதயநிதி இன்று தூத்துக்குடி வருகை
தமிழக துணை முதல்வரும் திமுக இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் வெள்ளிக்கிழமை (மே 2) தூத்துக்குடி வருகிறாா்.
விமான நிலையத்தில் துணை முதல்வருக்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் பிற்பகல் 2.30 மணிக்கு மாபெரும் வரவேற்பு வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் நிா்வாகிகள், கட்சியினா் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும் என மாவட்டச் செயலரும் அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளாா்.