கோவில்பட்டியில் ரத்த தான முகாம்
கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில், டூ வீலா் மெக்கானிக் அசோசியேஷன் சாா்பில் வியாழக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.
உழைப்பாளா் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற முகாமுக்கு, அசோசியேஷன் தலைவா் ஜீவா தலைமை வகித்தாா். செயலா் ரமேஷ் முன்னிலை வகித்தாா். கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெகநாதன் முகாமைத் தொடக்கிவைத்தாா். கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்புத் தலைவா் தமிழரசன் வாழ்த்திப் பேசினாா். அரசு மருத்துவமனை மருத்துவா் துளசிலட்சுமி தலைமையிலான மருத்துவக் குழுவினா் பங்கேற்று 34 பேரிடமிருந்து ரத்தம் சேகரித்தனா். சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.