செய்திகள் :

அமெரிக்காவின் மிரட்டல் பலிக்காது: சீனா

post image

அமெரிக்காவின் பேச்சுவார்த்தை குறித்து ஆலோசிக்கப்படுவதாக சீனா தெரிவித்தது.

வரி விதிப்பு குறித்து சீனாவுடன் அமெரிக்கா நடத்த விரும்பும் பேச்சுவார்த்தை குறித்து ஆலோசிக்க மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சீனாவின் வெளியுறவு அமைச்சகம் கூறியதாவது, வரி விதிப்பு மற்றும் வர்த்தகப் போரைத் தொடங்கியது, அமெரிக்காதான். அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால், அதில் நேர்மைத்தன்மை இருக்க வேண்டும்.

அந்நாட்டின் தவறான நடைமுறைகளைச் சரிசெய்வது, சீனா மீது மட்டுமான ஒருதலைப்பட்ச வரிவிதிப்பு பிரச்னைகளில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

எந்தவொரு பேச்சுவார்த்தையிலும், அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச வரிவிதிப்பு நடவடிக்கைகள் சரி செய்யப்படாவிட்டால், அது அந்நாட்டின் நேர்மையின்மையைத்தான் குறிக்கும்; அதுமட்டுமின்றி, அந்நாட்டின் மீதான நம்பிக்கையை குறைக்கும்.

மேலும், பேச்சுவார்த்தையின்போது, வற்புறுத்தலோ மிரட்டலோ சீனாவிடம் பலிக்காது என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் மீது பல்வேறு நாடுகள் அதிக வரி விதிப்பதாகக் கூறி, சீனாவைத் தவிர்த்து, மற்ற நாடுகள் மீது பரஸ்பர வரிவிதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

மேலும், அமெரிக்காவுக்கு எதிராக சீனா செயல்படுவதாகக் கூறி, சீன பொருள்களுக்கு மட்டும் 245 சதவிகிதம்வரையில் வரியை அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்தது. இதற்கு பதிலடியாக, அமெரிக்கா மீது சீனாவும் வரி விதிப்பை அறிவித்தது.

இதனிடையே, வரிவிதிப்பு குறித்து, தன்னிடம் சீன அதிபர் ஷி ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.

இருப்பினும், அவ்வாறு எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்று சீன வெளியுறவு அமைச்சகம் மறுத்தது.

இதையும் படிக்க:டிரம்ப் 100 நாள்கள்! நூற்றுக்கு நூறு பெற்றாரா?

நீண்ட வாழ்வின் ரகசியம்! என்ன சொல்கிறார் உலகின் மூத்த பெண்!

உலகின் அதிக வயதுடைய மனிதர் என்ற பட்டம் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு சென்றுள்ளது. உலகின் அதிக வயதுடைய மனிதர் என்று அறியப்பட்ட பிரேசில் நாட்டைச் சேர்ந்த கிறுஸ்தவ பெண் துறவியான இனாஹ் ... மேலும் பார்க்க

காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: 29 பாலஸ்தீனியர்கள் பலி

காஸாவில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதல்களில் 29 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மத்திய காஸாவில் உள்ள புரைஜ் அகதிகள் முகாமில் உள்ள ஒரு வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 பேரும் வட... மேலும் பார்க்க

ஜிடிஏ 6 விடியோ கேம் வெளியீடு! நீண்டகால காத்திருப்புக்கு முடிவு!

ஜிடிஏ 6 கேமின் வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனத்தின் கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ கேமின் (Grand Theft Auto) 6-வது பதிப்பின் வெளியீட்டுத் தேதியை, அந்நிறுவனம் அத... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கை! 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் 4 பயங்கரவாதிகள் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் த... மேலும் பார்க்க

ஆர்ஜென்டீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!

ஆர்ஜென்டீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.சிலி மற்றும் ஆர்ஜென்டீனாவின் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலந... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பிரதமரின் யூடியூப் சேனல் இந்தியாவில் முடக்கம்

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்பின் யூடியூப் சேனல் இந்தியாவில் முடக்கப்பட்டது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றம் காரணமாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளத... மேலும் பார்க்க