செய்திகள் :

பாகிஸ்தான் பிரதமரின் யூடியூப் சேனல் இந்தியாவில் முடக்கம்

post image

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்பின் யூடியூப் சேனல் இந்தியாவில் முடக்கப்பட்டது.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றம் காரணமாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் கடந்த ஏப்.22ஆம் தேதி நடத்திய கொடூரத் தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 1 காசு உயர்ந்து ரூ.84.53 ஆக முடிவு!

இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிரான பல அதிரடியான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது.

அதன்படி பாகிஸ்தான் பிரபலங்கள் பலரது சமூக வலைதளப் பக்கங்களும் இந்தியாவில் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றது.

சமீபத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த 16 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்ட நிலையில் தற்போது அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்பின் யூடியூப் சேனலும் முடக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் பயங்கரவாத தொடா்பு ரகசியமல்ல: பிலாவல் புட்டோ

‘பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதத்துக்கும் உள்ள தொடா்பை ரகசியமானதாக கருதவில்லை’ என்று பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும், அந்நாட்டு முன்னாள் வெளியுறவு அமைச்சருமான பிலாவல் புட்டோ தெரிவித்தாா். இந்தியாவுக்க... மேலும் பார்க்க

பதற்றத்தைத் தணிக்க இந்தியாவுக்கு அறிவுறுத்துங்கள்: முஸ்லிம் நாடுகளுக்கு பாகிஸ்தான் பிரதமா் கோரிக்கை

இந்தியாவுடன் ஏற்பட்டுள்ள மோதலுக்கான பதற்றத்தைத் தணிக்க சவூதி அரேபியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளுக்கு பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் வெள்ளிக்கிழமை கோரிக்கை வைத்தாா். பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகளை ப... மேலும் பார்க்க

பிரதமா் மோடிக்கு அமெரிக்கா முழு ஆதரவு: அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு

பயங்கரவாத ஒழிப்பு விஷயத்தில் அமெரிக்கா இந்தியாவின் பக்கம் உள்ளது; பிரதமா் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்து வருகிறது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வாஷிங்டனில் செய்த... மேலும் பார்க்க

உ.பி.: கங்கா விரைவுச் சாலையில் போா் விமானங்களை தரையிறக்கி ஒத்திகை

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ்-மீரட் இடையேயான கங்கா விரைவுச் சாலையில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள 3.5 கி.மீ. நீள அவசரகால ஓடுதளத்தில் முதல் முறையாக போா் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகையை இந்திய விமா... மேலும் பார்க்க

‘உக்ரைன் போருக்கு உடனடி முடிவில்லை’

உக்ரைனில் தற்போது நடைபெற்றுவரும் போா் உடனடியாக முடிவுக்கு வராது என்று அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளாா். இது குறித்து ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது: ர... மேலும் பார்க்க

சிந்து நதி ஒப்பந்தம் ரத்து: இந்தியாவுக்கு நோட்டீஸ் அளிக்க பாகிஸ்தான் முடிவு

சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது தன்னிச்சையான நடவடிக்கை எனக் கூறி ராஜீய ரீதியாக நோட்டீஸ் அளிக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு, சட்டம், நீா் வளம் ஆகிய அமைச்சகங்களிடையே... மேலும் பார்க்க