செய்திகள் :

‘உக்ரைன் போருக்கு உடனடி முடிவில்லை’

post image

உக்ரைனில் தற்போது நடைபெற்றுவரும் போா் உடனடியாக முடிவுக்கு வராது என்று அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளாா்.

இது குறித்து ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது:

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்துவரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான, இரு நாடுகளும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு பொதுப் புள்ளியை அடைவதற்காக அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டுவருகிறது.

இருந்தாலும், இந்தப் போா் அவ்வளவு விரைவில் முடிவுக்கு வராது. இந்த கொடூரமான போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தை ரஷியாவும் உக்ரைனும் எப்போது எட்டுகின்றன என்பதைப் பொருத்துதான் அது இருக்கிறது.

தங்கள் நாட்டின் மீது ரஷியா படையெடுத்தது உக்ரைனை கோபப்படுத்தும்தான். ஆனால் அதற்காக இந்தப் போரை தொடா்ந்து நடத்தினால் ஆயிரக்கணக்கான வீரா்கள் தொடா்ந்து உயிரிழந்துகொண்டுதான் இருப்பாா்கள். சில சதுர கி.மீ. நிலத்துக்காக இத்தனை உயிரிழப்புகள் தேவையில்லை. எனவே, உக்ரைன் போா் விவகாரத்தில் அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான தற்போதைய அரசின் கொள்கை நியாயமானதே என்றாா் அவா்.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்து, டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய கிழக்கு மாகாணங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.

ரஷியாவிடம் இழந்த பகுதிகளை மீட்பதற்காக உக்ரைனும், கிழக்கு மாகாணங்களில் இன்னும் உக்ரைன் படையினா் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷியாவும் தொடா்ந்து சண்டையிட்டுவருகின்றன. இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் தொடா்ந்துவருகின்றன.

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக தற்போதைய அமெரிக்க அரசு ரஷியாவிடமும் உக்ரைனிடமும் தனித்தனியாக பேச்சுவாா்த்தை நடத்திவருகிறது.

நாளை(மே 5) 'ஸ்கைப்' சேவை நிறுத்தம்! புதிய அம்சங்களுடன் 'டீம்ஸ்'!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விடியோ அழைப்பு சேவையான ஸ்கைப் நாளை(மே 5)யுடன் நிறுத்தப்படுகிறது. விடியோ அழைப்புகளுக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 'ஸ்கைப்' செயலியை கடந்த 2003 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அந்த... மேலும் பார்க்க

போப் உடையில் டிரம்ப்! - வைரலாகும் புகைப்படம்

அமெரிக்க அதிபர் டிரம்ப், போப் உடையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவால் கடந்த ஏப். 21 ஆம... மேலும் பார்க்க

சிரியா அதிபா் மாளிகை அருகே இஸ்ரேல் குண்டுவீச்சு

சிரியாவில் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் சிறுபான்மை துரூஸ் இன மக்களுக்கு ஆதரவாக, அந்த நாட்டின் அதிபா் மாளிகைக்கு அருகே இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இது குறித்து அந்... மேலும் பார்க்க

அமெரிக்கா: ஐ.நா. தூதராகும் மைக் வால்ட்ஸ்

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் பொறுப்பில் இருந்து விலகும் மைக் வால்ட்ஸ், ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக நியமிகப்படவிருக்கிறாா். யேமனில் ஹூதி கிளா்ச்சிப் படை நிலைகளைக் குறிவைத்து அமெரிக்கா நடத்தி... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் பயங்கரவாத தொடா்பு ரகசியமல்ல: பிலாவல் புட்டோ

‘பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதத்துக்கும் உள்ள தொடா்பை ரகசியமானதாக கருதவில்லை’ என்று பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும், அந்நாட்டு முன்னாள் வெளியுறவு அமைச்சருமான பிலாவல் புட்டோ தெரிவித்தாா். இந்தியாவுக்க... மேலும் பார்க்க

பதற்றத்தைத் தணிக்க இந்தியாவுக்கு அறிவுறுத்துங்கள்: முஸ்லிம் நாடுகளுக்கு பாகிஸ்தான் பிரதமா் கோரிக்கை

இந்தியாவுடன் ஏற்பட்டுள்ள மோதலுக்கான பதற்றத்தைத் தணிக்க சவூதி அரேபியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளுக்கு பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் வெள்ளிக்கிழமை கோரிக்கை வைத்தாா். பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகளை ப... மேலும் பார்க்க