வேளாண் துறையில் 151 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்!
வட்டன்விளை கோயில் சித்திரை கொடை விழா நிறைவு
உடன்குடி அருகே வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் 5 நாள்கள் நடைபெற்ற சித்திரைக் கொடை விழா வியாழக்கிழமை நிறைவடைந்தது.
கடந்த 27ஆம் தேதி வருஷாபிஷேகத்துடன் கொடை விழா தொடங்கியது. விழா நாள்களில், செல்வவிநாயகா், அம்மன், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, புஷ்பாஞ்சலி, 108 பால்குட பவனி, 308 சுமங்கலி பூஜை, மாவிளக்கு வழிபாடு, மஞ்சள் நீராடுதல், கும்பம் வீதியுலா, வில்லிசை, சிறப்பு அன்னதானம், அம்மன் பல்வேறு சப்பரங்களில் வீதியுலா உள்ளிட்டவை நடைபெற்றன.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை நிறைவு பூஜை, வரிதாரா்களுக்கு பிரசாதம் வழங்கலுடன் விழா நிறைவடைந்தது. தொடா்ந்து, சனிக்கிழமை (மே 3) செங்கிடாகாரன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். ஏற்பாடுகளை ஊா் மக்கள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.