செய்திகள் :

``social media-வை விட, நிஜ வாழ்க்கையின் மதிப்பு முக்கியம்..'' - Influencer மரணம் குறித்து டாப்ஸி

post image

2k கிட்ஸின் பெரும் உழைப்பு followers எண்ணிக்கையை அதிகரிப்பதற்குதான் செலவழிக்கப்படுகிறது. அதில்தான் தங்களின் மதிப்பு இருப்பதாகக் கருதுகின்றனர். followers எண்ணிக்கை கூடும்போது கொண்டாடுவதும், குறையும் போது மன அழுத்துக்குள் செல்வதும் என அவர்களின் மன நிலை பெரும் சிக்கலை சந்திக்கிறது.

மிஷா அகர்வால்
மிஷா அகர்வால்

மிஷா அகர்வால் எனும் காண்டன்ட் கிரியேட்டர் கடந்த 24-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக அவர்களின் குடும்பத்தார் சமீபத்தில் வெளியிட்ட தகவலில், ``மிஷா அகர்வால் கடந்த 24-ம் தேதி உயிரிழந்தார். அந்தத் தகவலை அவரைப் பின்தொடர்பவர்களுக்கு தெரிவிக்கவே இந்தப் பதிவு. ஏன் என்றக் காரணத்தை விளக்கும் மனநிலையில் நாங்கள் இல்லை" எனக் குறிப்பிட்டிருந்தனர்.

அதைத் தொடர்ந்து, மிஷா அகர்வாலின் குடும்ப உறுப்பினர்கள் கூறியதாக வெளியான தகவலில்,``சமீப காலமாகவே அவரின் Followers எண்ணிக்கை குறைந்துவருவது குறித்து அடிக்கடி மனச்சோர்வடைந்திருக்கிறார். தொடர்ந்து பல வீடியோக்களைப் பதிவிட்டு Followers எண்ணிக்கையை அதிகரிக்க முயன்றிருக்கிறார். எந்த முயற்சியும் கைகூடாமல் போகவே அவர் மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டார்" எனக் கூறப்பட்டது.

Taapsee Pannu
Taapsee Pannu

இந்த நிலையில், நடிகை டாப்ஸி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``சமூக ஊடகங்களின் கடுமையான அழுத்தங்கள் குறித்த இந்த செய்தி பெரும் துயரத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகத்தின் உங்கள் மதிப்பைவிட நிஜ வாழ்க்கையில் உங்களுக்கு இருக்கும் மதிப்பே மிகவும் அவசியமானது என்பதை இனிமேலாவது சிந்திக்க வேண்டும். சமூக ஊடகத்தில் பிரபலமடைய வேண்டும் என்ற தீவிர வெறித்தனத்தைக் கண்டு நீண்ட காலமாக அஞ்சினேன்.

சமூக ஊடகத்தில் இருக்கும் Followers எண்ணிக்கை நேரில் கிடைக்கும் அன்பை விட அதிக மதிப்பளிக்கப்படும் காலம் வரும் என அஞ்சுகிறேன். அதனால் சமூக ஊடகத்தில் உங்களுக்கு கிடைக்கும் அன்பு போன்ற தோற்றத்தால், உண்மையான அன்பை அலட்சியப்படுத்தும் சூழல் உருவாகும். இந்த உடனடி திருப்தி, லைக்ஸ், கமெண்ட் தான் உங்களை மதிப்பு மிக்கவர்களாக மாற்றுகிறது என்பது மிகவும் மனவேதனையளிக்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

`ரூ.10,000 பந்தயம்' - 5 பாட்டில் மதுவை ராவாய் குடித்த இளைஞர்.. சவாலுக்காக உயிரை விட்ட பரிதாபம்..!

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள நன்கலி என்ற இடத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (21). கார்த்திக்கும் அவரது நண்பர்கள் சிலரும் அமர்ந்து அடிக்கடி மது அருந்துவதுண்டு. அப்படி அவர்கள் மது அருந்த அமர்ந்... மேலும் பார்க்க

`வீட்டில் டார்ச்சர்' - டியூசனுக்கு வந்த மாணவனுடன் எஸ்கேப் ஆன ஆசிரியை - நடந்தது என்ன?

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த 23 வயது பெண் தனது வீட்டில் மாணவர்களுக்கு டியூசன் நடத்தினார். அவரிடம் 5-வது வகுப்பு படிக்கும் 11 வயது மாணவன் ஒருவனும் டியூசன் படித்துள்ளான். 23 வயது பெண்ணிடம் அவரது பெற்... மேலும் பார்க்க

ரீல்ஸ் எடுத்த பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞர்; பதிலுக்கு பெண் செய்த வேலை.. - வைரல் வீடியோ!

வட இந்தியாவைச் சேர்ந்த இன்ஃப்ளுயன்சர் ஒருவர், வீட்டின் மாடிப் பகுதியில் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருக்கும்போது இடையில் வந்த இளைஞர் அந்தப் பெண்ணை தகாத முறையில் தொடும்படியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகி... மேலும் பார்க்க

``நோ லிமிட், நோ கமிட்மெண்ட்'' - சீன இளைஞர்கள் விரும்பும் `நட்பு திருமணம்'.. காரணம் என்ன?

வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கிறோம் என்றால் அதில் காதல், காமம், பொறுப்புகள் என பல விஷயங்கள் இருக்கும். ஜென் z தலைமுறையினரிடம் திருமணம் இல்லாத உறவுகள் பிரபலம் அடைந்து வரும் நிலையில், சீனாவில் காதல் இல... மேலும் பார்க்க

கல்யாணத்தில் ஒலித்த பாடல்; திருமணத்தை நிறுத்திய மணமகன் - பின்னணி இதுதான்

இந்தியாவில் திருமண சீசன் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் பல இதயங்கள் இணையும் விழாக்கள் நடந்துகொண்டிருக்க, பல வித்தியாசமான சம்பவங்களும் அரங்கேறுகின்றன. டெல்லியில் நடந்த திருமண நிகழ்வில் எதிர்பாராத திருப... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: குறுகிய கால விசாவில் இருக்கும் 1000 பாகிஸ்தானியர்கள் வெளியேற பட்னாவிஸ் உத்தரவு

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர். இத்தாக்குதலில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பு ஈடுபட்டு இருப்பத... மேலும் பார்க்க