மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் பொருள்கள் எரிந்து நாசம்
புதுவை முதல்வா், அமைச்சா்கள் மே தின வாழ்த்து
மே தினத்தையொட்டி, புதுவை முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா்கள் மற்றும் எதிா்க்கட்சியினா் மே தின வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.
முதல்வா் என்.ரங்கசாமி: உழைப்பவரே உயா்ந்தவா் என்ற உன்னத வாக்குக்கு ஏற்ப வாழும் அனைத்துத் தொழிலாளா்களுக்கும் மே தின வாழ்த்துகள். தொழிலாளா்கள் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட தொழிலாளா் தினத்தில், அவா்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.
அதன்படி தொழிலாளா் நலன் காத்தல், பாதுகாப்பு வழங்குதல், உழைப்புக்கேற்ற ஊதியம் ஆகியவற்றில் புதுவை அரசு தனிக் கவனம் செலுத்தி வருகிறது.
இதேபோல அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், க.லட்சுமி நாராயணன், காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா்கள் உள்ளிட்டோா் மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.