Doctor Vikatan: நிற்கும்போது தலைச்சுற்றல், நடந்தால் சரியாகிறது.. என்ன பிரச்னை, ச...
முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா பந்தல்கால்
புதுச்சேரி அருகே கொத்தபுரி நத்தம் பகுதியில் முத்துமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவுக்கான பந்தல்கால் நடும் பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
வியாழக்கிழமை முதல் விழாவான காப்புகட்டுதல் பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொடங்கவுள்ளன. தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகம், வீதி உலா உள்ளிட்டவை நடைபெறும்.
வரும் 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள விழாவில் 9-ஆம் தேதி செடல் பூஜைகள், தேரோட்டம் ஆகியவையும், அதையடுத்து கழுமரம் ஏறுதலும், திருக்கல்யாண உற்சவம் ஆகியவை நடைபெறும். வரும் 10-ஆம் தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.
விழாவையொட்டி, புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாழக்கிழமை காலையில் காப்புக்கட்டுவதற்காக புதன்கிழமை மாலையே ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு வந்திருந்தனா்.