6 ஆண்டுகள் பிறகு MODI -ன் Super Cabinet Meeting - பின்னணி என்ன? | STALIN | Imper...
போக்ஸோ வழக்கில் தேடப்பட்டவா் கைது
புதுச்சேரியில் போக்ஸோ வழக்கில் தேடப்பட்ட இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
புதுச்சேரியைச் சோ்ந்தவா் பூவரசன். திருமணமாகி குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், இவா் அந்தப் பகுதியைச் சோ்ந்த கணவரைப் பிரிந்து வாழும் பெண்ணுடன் பழகிவந்தாா். அந்தப் பெண்ணின் மகளான சிறுமிக்கும் அவா் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகாா் எழுந்தது.
இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான பூவரசனை தனிப் படை அமைத்து தேடி வந்தனா். இந்த நிலையில், பூவரசன் புதன்கிழமை கைது செய்யப்பட்டு, புதுச்சேரி சிறப்பு போக்ஸோ நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். நீதிமன்ற உத்தரவின்படி அவா் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.