சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
HIT 3: "எப்போதும் தமிழ், மலையாள ரசிகர்களின் விமர்சனங்களைத்தான் பார்ப்பேன்; ஆனா இப்போ..." - நானி
நானி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'ஹிட்: தேர்ட் கேஸ்' (HIT: Third Case) சைலேஷ் கொலனு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
நானிக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். மே 1 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்திற்கான புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் நேற்று (ஏப்ரல் 26) இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
அதில் பேசிய நானி, “இந்த மேடையில் தமிழில் பேசுவதற்குப் பயமாக இருக்கிறது. நிச்சயமாக முழுமையாகக் கற்றுக்கொண்டு ஒரு நாள் இங்கு வந்து தமிழில் பேசுவேன்.
தமிழ் சினிமாத்தான் என்னுடைய கரியருக்கு வடிவம் கொடுத்தது என்று நிறைய நேர்காணலில் சொல்லி இருக்கிறேன். 2012 ஆம் ஆண்டு படப்பிடிப்பிற்காக நான் சென்னையில்தான் தங்கி இருந்தேன்.
அப்போது இங்குள்ளவர்கள் என்னை அன்பாகப் பார்த்துக்கொண்டார்கள். எப்போது நான் சென்னைக்கு வந்ததாலும் அந்த அன்பு எனக்குக் கிடைக்கும். தெலுங்கு ரசிகர்கள் என் படம் நன்றாக இருந்தாலும் கொண்டாடுவார்கள் நன்றாக இல்லையென்றாலும் என் மீது வைத்திருக்கும் அன்பால் கொண்டாடுவார்கள்.
அதனால் என்னுடைய படங்கள் வெளியாகும் போது உண்மையில் படம் எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்வதற்காக நான் தமிழ் மற்றும் மலையாள ஆடியன்ஸின் விமர்சனங்களைத்தான் பார்ப்பேன்.

ஆனால் இப்போது தமிழ் மற்றும் மலையாள ஆடியன்ஸும் என் மீது வைத்திருக்கும் அன்பால் என்னுடைய படத்தைக் கொண்டாடுகிறார்கள்.
அதனால் சரியான விமர்சனத்தை யாரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது என்று தெரியவில்லை" என்று சிரித்துக்கொண்டே பேசியிருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஹிட் 1 மற்றும் ஹிட் 2 படங்களைப் பார்க்கவில்லை என்றாலும் கூட ஹிட் 3-யை பார்க்கலாம். முதல் 2 பாகங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை.
'ஹிட்: தேர்ட் கேஸ்' படத்தைப் பார்த்தால் உங்களுக்கு ஒரு சிறந்த அனுபவம் கிடைக்கும். இந்தப் படத்திற்காகக் கடினமாக உழைத்திருக்கிறோம். கண்டிப்பாக உங்களுக்கு இந்தப் படம் பிடிக்கும் என்று நினைக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...